ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!

239 0

நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.சுவை மிகுந்த அன்னாசிப்பழ கேசரி செய்ய !!

பழத்தை சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; காயங்கள் குணமாகும்; உடல் எடையை குறைக்க உதவி செய்யும்; எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை அள்ளித் தரும் அன்னாசிப் பழத்தைக் கொண்டு, சுவை மிகுந்த மற்றும் ஆரோக்கியமான கேசரியை எப்படி செய்யலாம் என்று காண்போம்.

தேவையான பொருட்கள்

நறுக்கிய அன்னாசிப் பழம் – 1 கப்
நாட்டு சர்க்கரை – 1 1/2 கப்
முந்திரி – 10
உலர் திராட்சை – சிறிதளவு
ரவை – 1 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
நெய் – 1/2 கப்
எண்ணெய் – 1/3 கப்

அன்னாசிப் பழ கேசரி செய்முறை

நெய் மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் 3 தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பின்னர், ஒன்றிரண்டாக உடைத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பு சிவக்கும் வரை வறுத்தெடுக்க வேண்டும். இதனுடன் உலர் திராட்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

திராட்சை சற்று பெரிதானதும், அதை வெளியில் எடுத்து விட்டு வெட்டி வைத்துள்ள அன்னாசிப் பழத்தை அதே நெய்யில் சேர்த்து 4 முதல் 5 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். பின்னர் இதில் இரண்டரை கப் அளவு தண்ணீரை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் ஏற்கனவே கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி, அது சூடான பிறகு, ரவையை சேர்த்து மணல் மணலாய் வரும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். அதன்பின் ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள அன்னாசி மற்றும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இதில் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் வற்றிய பின்னர், நாட்டு சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கடைசியாக தேவை ஏற்பட்டால் மட்டும், மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை 4 தேக்கரண்டி அளவு இதன் மீது சேர்க்க வேண்டும். பின்னர் பாத்திரத்தை மூடி மிகவும் குறைவான சூட்டில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இறுதியாக ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடியைச் சேர்த்து கிளறினால் ஆரோக்கியம் நிறைந்த சூப்பரான அன்னாசி கேசரி ரெடியாகி விடும்.

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறும் தனம்- மூர்த்தி! அதிர்ச்சி ப்ரொமோ

Posted by - May 15, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்துவிட்டனர். முதல் தம்பி ஜீவா சண்டை போட்டுவிட்டு மாமியார் வீட்டிலேயே…

வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் நல்ல ஹிட்டடிக்க மைனா நந்தினியாகவே…

TRP ரேட்டிங்கில் விஜய் டிவி தொடரை பின்னுக்கு தள்ளிய கார்த்திகை தீபம்! முதலிடத்தை பிடித்தது எது தெரியுமா?

Posted by - March 8, 2025 0
சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களை பிடித்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம். எப்படி ஒவ்வொரு வாரமும் புதுப்புதுப்…

லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்

Posted by - September 6, 2023 0
ரம்யா கிருஷ்ணன் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில்…

பச்சோந்தி இனியா.. பாக்கியலட்சுமி புது ப்ரோமோ பார்த்து வெச்சி செய்யும் நெட்டிசன்கள்

Posted by - July 22, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பாக்யா பணத்தை ரெடி செய்து கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு அனுப்பிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *