கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!

198 0

மணமக்கள் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி ஆகிய இருவரையும் நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.Actor Vijay attend keerthy suresh antony wedding photo viral TVK Vijay:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். விக்ரம்பிரபு, சிவகார்த்திகேயன், விஷால், விஜய் என தமிழின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபல  ஹீரோயினாக உலா வருகிறார். இவருக்கும் இவரது பள்ளிகால நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த 12ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.

நேரில் வாழ்த்திய விஜய்:

பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்தினார். நடிகர் விஜய் மட்டுமின்றி த்ரிஷா, இயக்குனர் அட்லீ போன்ற திரை பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்தினர்.

கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்திய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். நடிகரும். தவெக தலைவருமான விஜய் மணமக்கள் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி இருவரது தோளிலும் கை போட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 

மேலும், கீர்த்தி சுரேஷ்  மற்றும் ஆண்டனி இருவருக்கும் கை கொடுத்து தனது வாழ்த்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்காக நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் விமானத்தில் ஒன்றாக சென்றது இணையத்தில் பெரும் பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி கதாநாயாகியாக உலா வருகிறார்.

Related Post

துணிவு ‘சில்லா சில்லா’ வெளியானது.. ரசிகர்கள் கொண்டாடும் பாடல் இதோ

Posted by - December 9, 2022 0
துணிவு படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.  

தன்னை உருவாக்கிய கேப்டனை கண்டு கதறியழுத விஜய்..

Posted by - December 29, 2023 0
தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரும் பேரிழப்பு என்றே சொல்லலாம். கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இன்று இறந்தார். பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை…

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

Posted by - October 26, 2024 0
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே…

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை

Posted by - September 22, 2023 0
சதா தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.…

ரூ.300 கோடியை நெருங்கும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’

Posted by - June 19, 2023 0
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *