“சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு” முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்

183 0

தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில் கட்டண உயர்வு குறித்து விமர்சித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பதிலடி அளித்துள்ளார்.

ஸ்டாலினை கலாய்த்த இபிஎஸ்:

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்

அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார். நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல.

“சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு”

உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் பொம்மை முதலமைச்சரே, கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில் ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?

உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா? தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது ‘சாத்தான் வேதம் ஒதுவது போல்’ உள்ளது” என விமர்சித்துள்ளார்.

சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும், ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்;

Related Post

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை : சீமான் , திருமாவளவனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து..!!

Posted by - June 10, 2024 0
புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக…

”உதயநிதியும் அவரது தாயும் தான் முதலமைச்சர்கள்”- செல்லூர் ராஜு விமர்சனம்

Posted by - December 12, 2022 0
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்,  பெரிய விசயம் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல்  பெரிய விசயம் இல்லை என்றும்…

நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?

Posted by - July 11, 2025 0
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் மூன்று முறை எப்போது எனது உயிரை காப்பாற்றினார்? என பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர்…

“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ – நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்

Posted by - July 14, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *