இந்த மாத இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடுகிறது ஜப்பான்

234 0

ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது. மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும், கடல் நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.இந்த மாத இறுதியில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடுகிறது  ஜப்பான் | Japan Plans To Start Releasing 'treated' Radioactive Water As Soon  As Late August

ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில் ஜப்பானிய அரசாங்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை, இம்மாத பிற்பகுதியில் கடலில் வெளியிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஆகியோருடன் அடுத்த வாரம் அமெரிக்காவில் தனது சந்திப்புகளை முடித்த பிறகு, சுமார் 1.3 மில்லியன் டன் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியிடுவதற்கான செயல்முறை தொடங்கும். ஜப்பானிய தலைவர், இரு நாட்டு தலைவர்களுக்கும் நீர் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

இவையெல்லாம் மாரடைப்புக்கான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்.. என்னென்ன தெரியுமா..?

Posted by - November 26, 2024 0
 மாரடைப்பு அறிகுறிகள் பெரும்பாலும் ஆண்களில் ‘வழக்கமானவை’ என்றும், பெண்களில் ‘வித்தியாசமானவை’ என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வில் அறிகுறிகள் பாலினங்கள் இடையே வேறுபட்டாலும், ஓரு சில…

Hero Splendor Electric: இந்தியாவின் நம்பர் ஒன் பைக்.. ஸ்ப்ளெண்டரை மின்சார எடிஷனில் களமிறக்கும் ஹீரோ – 180KM ரேஞ்ச்

Posted by - September 16, 2025 0
Hero Splendor Electric: இந்திய பைக் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ப்ளெண்டர் மாடலை, மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Hero Splendor…

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்

Posted by - September 6, 2023 0
டோக்கியோ: இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிரபஞ்சத்தில் தொலைநோக்கியின் மூலமாகவும், அறிவியல் நுணுக்கங்களையும் வைத்து தற்போது வரை…

உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா

Posted by - May 27, 2025 0
எதுவுமே தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற சொல்வார்கள். அதுபோல, பாகிஸ்தானில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை வந்த உடன் தான், அமைதிப் பேச்சுவார்த்தை வேண்டும் என்று…

காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம்- WHO தலைவர் சொல்கிறார்

Posted by - October 28, 2023 0
ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *