என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

192 0

#சிம்_கார்டு_நினைவுகள் :

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?

இதெல்லாம் இப்ப எங்க போச்சு..?

ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு எல்லாம் பாக்குறப்ப அவ்வளவு பிரமிப்பா இருக்கும்.

அப்பல்லாம் பெரும்பாலும் நோக்கியா ஃபோன் மட்டும்தான் இருக்கும். அதுவும் ஒரு வீட்டுல பொதுவா ஒண்ணே ஒண்ணு மட்டும்தான் இருக்கும். எல்லாருக்கும் தனித்தனியா இருக்காது.

நம்ம வீட்டுல புதுசா செல்ஃபோன் வாங்குறதை, ஏதோ உலக அதிசயத்தை பார்த்துட்ட மாதிரி அத்தனை பிரமிப்பா இருக்கும்.

சிம் கார்டு வாங்குறதே பெரிய சாதனை செஞ்ச மாதிரி இருக்கும்.

பெரும்பாலும் எல்லாரும் முதல்ல தேர்வு செய்யுறது #ஏர்செல் சிம் கார்டாதான் இருக்கும்.

ஏர்செல் சிம்கார்டு வாங்குனா லைஃப் டைம் இன்கமிங் ஃப்ரீனு ப்ளான் வந்ததுக்கு அப்பறம்தான் நிறைய வீட்டுல செல்ஃபோன் வாங்க ஆரம்பிச்சாங்க.

பெரும்பாலான ஊர்கள், கிராமங்கள்ல எல்லாம் ஏர்செல்லுக்கு மட்டும்தான் டவர் கிடைச்சுது.

அப்புறம் ஏர்டெல் சிம் யூஸ் பண்ணுறவங்க எல்லாம் பெரிய படிப்பாளிங்க போலன்னு தோணும்.

பிஎஸ்என்எல் சிம்லாம் கவர்ன்மென்ட் வேலை பாக்குறவங்க யூஸ் பண்ணுறதுனு தோணும்.

பிபிஎல் சிம் பாதி பேருக்கு தெரியவே தெரியாது. அப்பறம் அது #ஹட்ச்சா மாறுச்சு. அப்பறம் ஃவோடபோன் ஆச்சு. இப்ப #வோடபோன்_ஐடியாவா இருக்கு.

ஐடியா சிம் கார்டு யூஸ் பண்ணுறவங்க ரொம்ப கம்மியாதான் இருந்தாங்க.

யுனினார் சிம் வந்த டைம்ல, பெரிய ஜாமென்ட்ரி பாக்ஸ் சைஸ் டப்பால வந்துச்சு. ஆனா மக்கள் ரொம்ப கம்மியா தான் வாங்குனாங்க‌.

வெர்ஜின் சிம்லாம் சில குறிப்பிட்ட ஃபோன்ல மட்டும்தான் போட முடியும்.

இது போக எம்.டி.எஸ் னு ஒரு கம்பெனி சிம் வந்துச்சு. அதெல்லாம் யாரு யூஸ் பண்ணாங்கனு கூட தெரியாது.

அப்பறம் ரிலையன்ஸ் சிம்…

முதல்ல 500 ரூபாய்க்கு ரெண்டு செல்ஃபோன் கொடுத்தாங்க. அப்பறம் தனி சிம்கார்டுல (CDM) வந்துச்சு. ஆனா அதுவும் ரிலையன்ஸ் ஃபோன்ல மட்டும்தான் போட்டு யூஸ் பண்ண முடியும்.

2009 ஆம் வருசம் வாக்குல டொக்கமோ சிம் வந்துச்சு. ஆனா இந்த கம்பெனி எப்ப மூடுனாங்கனு இப்ப வரை தெரியல.

அப்பல்லாம் பத்து ரூபா ரீசார்ஜ் கார்டு வந்தப்ப அவ்வளவு ஈசியா நமக்கு கிடைக்காது. அதை வாங்கி, சுரண்டி, செல்ஃபோன்ல டைப் பண்ணி, ரீசார்ஜ் ஆனதும் மிஸ்டு கால் கொடுக்குற சுகமே தனி.

காசு இருக்குறப்ப ரெண்டு, மூணு ரீசார்ஜ் கார்டு வாங்கி புக்குல பத்திரமா வச்சிருந்து, பேலன்ஸ் காலியாக காலியாக ஒவ்வொரு கார்டா சுரண்டி ரீசார்ஜ் பண்ணி பேலன்ஸ் ஏத்துற பரவசம் அப்படி இருக்கும்.

அப்பறம் பொங்கல் , தீபாவளிக்கு பிக்சர் மெசேஜ் அனுப்புனதெல்லாம் அழியாத நினைவுகள்.

அப்போ எல்லாம் சிம்கார்டு அட்டையை ஓப்பன் பண்ணுறப்ப ஒரு தனி வாசமே வரும். அது தர்ற சந்தோசம் அலாதியானது.

அதுவும் அந்த ரீசார்ஜ் கார்ட சுரண்டி யூஸ் பண்ணதுக்கு அப்பறம் ஒரு பேப்பர் பிரிண்டிங் வாசம் வரும். இன்னைக்கும் அது மறக்காத வாசம்.

அப்பறம் ஈசி ரீசார்ஜ் வந்தப்ப அந்த ரீசார்ஜ் கார்டுங்க காணாமலே போயிருச்சு.

இன்னைக்கு நம்ம ஒவ்வொருத்தர் கையிலும் ஒரு ஆன்ட்ராய்டு இருக்கலாம்.

ஆனா 2000 ஆம் வருசம் ஆரம்ப காலகட்டத்துல இருந்து, 2006,2007,2008 ஆம் வருடத்துக்கு முந்தைய கால கட்டத்துல மொபைல் யூஸ் பண்ணவங்க நான் சொன்ன விஷயங்கள உணர்ந்திருப்பாங்க.

இன்னைக்கு, சிம்கார்டு ரொம்ப சாதாரணமா போயிடுச்சு. அதுக்காக நாம் பெரிசா அலட்டிக்கிறது இல்ல‌.

அதே போல் இப்பலாம் எப்படியெல்லாமோ நம்பர் வருது. ஆனா அப்பல்லாம் ஒவ்வொரு கம்பெனிக்கும் குறிப்பிட்ட சீரிஸ்ல மட்டும்தான் நம்பர் வரும்.

9842 வந்தா ஏர்செல், 999 னு வந்தா ஏர்டெல், 944 னு வந்தா பிஎஸ்என்எல், 9843 வந்தா ஹட்ச், 9345 வந்தா ரிலையன்ஸ், 92 ல ஆரம்பிச்சா டாட்டா இன்டிகாம். ஆனா இப்போலாம் எந்த கம்பெனிக்கும் தனிப்பட்ட சீரியல் நம்பர்னு எதுவுமில்லை.

இப்ப மூணு மாசத்துக்கு ஒரு தடவை நாம நினைச்ச கம்பெனிக்கு மாறிக்கலாம். ஆனா அப்போ அப்படி இல்ல.

ஆனா இன்னைக்கும் நான் யார்கிட்டயாது நம்பர் கேக்குறப்ப, 9842, 9965, 9840, 9865, 999, 9976, னு ஆரம்பிக்கிற நம்பர அவங்க சொல்லும் போது மனசு அப்படியே பழைய நினைவுகளுக்கு போயிடுது. இந்த வரிசையில் ஆரம்பிக்கும் நம்பர் எல்லாம் 2003, 2005 முதல் 2010 ஆம் வருட கால கட்டங்கள்ல ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால வந்த ஃபோன் நம்பர்ஸ்.

காலம் மாறிடுச்சு, நாம அதை விட மாறிட்டோம். ஆனா நம்ம நினைவுகள் மாறாம இருக்கும்.

ஒரு சின்ன சிம்கார்டுல இருக்குற சின்ன “சிப்புல”, என்னுடைய பல வருடங்களுக்கு முந்தைய நினைவுகள் இன்னும் அழியாம இருக்கிறது.

Related Post

கடலை மாவு இருக்கா? அப்ப இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசை, பூரிக்கு செமயா இருக்கும்..

Posted by - December 12, 2023 0
காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்யப் போகிறீர்களா? எப்போதும் காலையில் இட்லி, தோசை சாப்பிடுவது சரி, அதற்காக சைடு டிஷ் கூட ஒரே மாதிரி…

வாய்ப்பு தாரேன்னு சொல்லி அப்படி நடந்துகொண்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்க்ஷி அகர்வால்

Posted by - February 3, 2024 0
சாக்ஷி அகர்வால் நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.…

Dry ice – ஏன் இது உயிருக்கே ஆபத்தானது..?

Posted by - March 9, 2024 0
பலரும் அறியாத உலர் ஐஸ் குறித்தும் அதன் ஆபத்துகள் …. Dry ice-ஆல் வந்த வினை… டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட மவுத் ஃப்ரெஷ்னரை…

கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

Posted by - January 11, 2024 0
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம்…

பிக் பாஸ்க்கு பிறகு புத்தம் புதிதாக வரப்போகும் 4 சீரியல்கள்.. இரண்டு சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்க போகும் இயக்குனர்கள்

Posted by - December 30, 2024 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலை விட ரியாலிட்டி ஷோ மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனால் சமீப…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *