கடைசி பந்து வரை உச்சக்கட்ட பரபரப்பு… 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது தல தோனி படை..!

397 0

மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி, கடைசிப் பந்தில் த்ரில் வெற்றிபெற்று சாதித்தது. இதன்மூலம், தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக மகுடம் சூடி சாதனை நிகழ்த்தியது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, மாற்று நாளான நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளும் மழைக்கு வாய்ப்பிருந்ததால் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் கண்ட குஜராத் அணியில், தொடக்க வீரர் ஷுப்மன் கில் 3 ரன்கள் சேர்த்திருந்த போது, தேஷ்பாண்டே ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இதையடுத்து தனது அதிரடியை தொடர்ந்த ஷுப்மன் கில், 39 ரன்கள் சேர்த்திருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றப்பட்டார்.

Related Post

ரிஷப் பண்ட் உடல்நிலை எப்படி உள்ளது…? உலகக் கோப்பையில் விளையாடுவாரா…? புது அப்டேட்..

Posted by - May 31, 2023 0
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. கிரிக்கெட் வீரர் ரிஷப்…

IPL 2023 : ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணிக்கான வாய்ப்புகள் என்ன?

Posted by - May 17, 2023 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில்…

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்… பிரியாவிடை கொடுத்த ஆர்சிபி வீரர்கள்

Posted by - May 23, 2024 0
அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர்.…

Jadeja CSK: சிஎஸ்கே-வை விட்டு வெளியேற ஜடேஜா ”ஓகே” சொன்னது ஏன்? ராஜஸ்தானின் கிஃப்ட், சாம்சனுக்கு ”நோ”

Posted by - November 12, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு விலக, ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வழங்கிய சலுகைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். சென்னை சூப்பர் கிங்ஸ்…

இன்றும் மழை பெய்தால் என்னவாகும் ? யாருக்கு கிடைக்கும் கோப்பை?

Posted by - May 29, 2023 0
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதனால், சென்னை- குஜராத் இடையேயான இறுதிப் போட்டி, இன்றிரவு 7.30…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *