இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

333 0

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி அல்ல அது குடும்பம் என்று தான் கூறுவார்கள்.

 

மற்ற அணியில் சொதப்பிய வீரர்கள் எல்லாம் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு சிறப்பாக விளையாடுவதற்கு காரணமும் இங்கு கிடைக்கும் மரியாதை தான். இந்த நிலையில் நேற்று சாம்பியன் பட்டம் வென்ற பிறகு எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் போல் சிஎஸ்கே அணியினர் செய்த செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திறமை இருந்தும் பெரிய அளவில் சர்வதேச அளவில் சாதிக்க முடியாமல் போன ராயுடு ஐபிஎல் வரலாற்றில் ஆறு கோப்பையை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.இந்த நிலையில் இறுதி போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்திருந்தார். நேற்று ஆட்டத்தில் கூட ராயுடு 8 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார்இதில் இரண்டு சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் ஆட்டம் சிஎஸ்கேவின் பக்கத்திற்கு மாறியது. இதனை அடுத்து கோப்பையை வழங்கும் போது தோனி ஜடேஜாவையும் ராய்டுவையும் வந்து கோப்பையை வாங்க சொன்னார். இதனை அடுத்து இடது புறம் நிற்க ஜடேஜா வலது புறம் நிற்க ராயுடு நடுவில் கோப்பையை வாங்கினார்.

 

இதை அடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் மேடைக்கு வந்து உற்சாகமாக வெற்றியை கொண்டாடினார்கள். இதனை அடுத்து வழக்கம் போல் சிஎஸ்கே வின் இளம் வீரர்களிடம் கோப்பை சென்றது. பதிராணா, சிவம் துபே, ஷேக் ரசித், முகேஷ் சௌத்ரி போன்ற வீரர்கள் ஐபிஎல் கோப்பையில் வாங்கி கொண்டாடினர்.

 

FxVAabYaMAgWaaR

 

அதன் பிறகு வீரர்கள் தங்களது குழந்தைகள் வரவழைத்து அவர்களிடம் கோப்பையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோனியின் மகள் ,ஜடேஜாவின் மகள், ரகானேவின் மகள், மோயின் அலி மகன் என அனைவரும் கோப்பையுடன் நின்று தங்களது தந்தைகளின் வெற்றியை கொண்டாடினார்கள். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது. இது கிரிக்கெட் அணியா இல்லை விக்ரமன் சார் படத்தில் வரும் குடும்பமா என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

FxVeEjQaQAAKqzq

 

 

FxVUSU aUAAGP2L

Related Post

‘சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவினார்’ – டெவோன் கான்வே புகழாரம்

Posted by - April 30, 2023 0
எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார். சிறந்த…

வருண் Vs கோலி – பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?

Posted by - March 22, 2025 0
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற…
Generated Image November 15 2025 10 36AM

CSK Trade: Its Official.. ஜடேஜா, சாம் கரன் விட்டுக் கொடுத்த சிஎஸ்கே.. தோனியின் வாரிசாக சாம்சன் இணைப்பு

Posted by - November 15, 2025 0
CSK Trade: சஞ்சு சாம்சனிற்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. CSK Trade: ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக…

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. சூப்பர் ஓவர் த்ரில்.. ஸ்டார்க்கால் டெல்லி அபார வெற்றி

Posted by - April 17, 2025 0
ராஜஸ்தான் – டெல்லி அணி ஆடிய போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்ற நிலையில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *