Generated Image November 17 2025 11 34AM

தாக்கும் காங்கிரஸ்… தயங்கும் திமுக! – என்ன மாயம் செய்தார் ராஜேந்திர பாலாஜி?

212 0

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இம்முறை சிவகாசியில் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் திமுக மவுன சாட்சியாக நிற்பது உடன்பிறப்புகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார் கே.டி.ராஜேந்திர பாலாஜி. தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்ததால் விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் அசைக்க முடியாத சக்தியாகவும் உருவெடுத்தார். அமைச்சர் அந்தஸ்தில் அமர்ந்திருந்தபோது ஸ்டாலினை கடுமையாக ஒருமையில் விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பாலாஜி. அப்படிப்பட்டவர் கடந்த 2021 தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்டு தோற்றுப் போனார். ஒருமுறை சூடுபட்டுக் கொண்டதால் இம்முறை மீண்டும் சிவகாசியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.சிவகாசி தொகுதியில் கடந்த முறைவெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-வான அசோகன் இம்முறை மீண்டும் சிவகாசியில் சீட் பெற காய் நகர்த்தி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் 13,850 வாக்குகள் கூடுதலாக பெற்றதாலேயே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றி சாத்தியமானது.இந்நிலையில், சிவகாசியின் முதல் மேயர் பதவியை கைப்பற்றியதைப் போலவே, இம்முறை சிவகாசி எம்எல்ஏ பதவியையும் கைப்பற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுக-வையும், ராஜேந்திர பாலாஜியையும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிவகாசி ரயில்வே மேம்பால திறப்பு விழாவில் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, “10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும் ரயில்வே மேம்பால திட்டத்துக்காக ஒரு செங்கலைக்கூட எடுத்துவைக்கவில்லை ராஜேந்திர பாலாஜி” என விமர்சித்தார். ஆனால் காங்கிரஸ் இப்படி பாலாஜியை வாரிக் கொண்டிருக்க, திமுக நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் மவுனமாகவே இருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சிவகாசி திமுக சீனியர்கள் சிலர், “ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்திலும் திமுக தலைவர் ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சித்தார். தற்போதும் திமுக அரசையும், சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்தையும் விமர்சித்து வருகிறார்.

இம்முறை சிவகாசி தொகுதி மீது அமைச்சர் தங்கம் தென்னரசு தனி கவனம் செலுத்தி வரும் நிலையில், உள்ளூர் திமுக நிர்வாகிகள் ஏனோ ராஜேந்திர பாலாஜி விஷயத்தில் மவுனம் சாதிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கும் அளவுக்குக்கூட அதிமுக-வை திமுக-வினர் விமர்சிப்பதில்லை. அந்தளவுக்கு ராஜேந்திர பாலாஜி என்ன மாயம் செய்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை” என்றனர்.

Related Post

asdfghnm e1777009634491

85%-ஐ கடந்த வாக்குப்பதிவு – ஸ்டாலின் Vs எடப்பாடி Vs விஜய் Vs சீமான் – CM வேட்பாளர்களின் நிலை என்ன?

Posted by - April 24, 2026 0
Tamilnadu Assembly Election 2026 Vote Percentage: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களின், தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விவரங்களை இங்கே அறியலாம். Tamilnadu Assembly…

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

Posted by - July 22, 2025 0
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள…

புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்…..

Posted by - December 15, 2025 0
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

Posted by - April 21, 2026 0
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரவித்துள்ளார். அவர் விடுத்துள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *