யார் அந்த சார்? பேட்ஜ்.. சட்டப்பேரவையின் முதல் நாளே அதிரடியாக ஆரம்பித்த அதிமுக!

220 0

பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளே அதிமுக தடாலடியாக ஆரம்பித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஆளுநர் உரையோடு தொடங்குவது மரபு. அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியை முறைப்படி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். காலை 9.30 மணி அளவில் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து, பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.அதன்படி, சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் முதல் நாளே அதிமுக தடாலடியாக ஆரம்பித்துள்ளது. “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர்.சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, மாணவி வன்கொடுமை விவகாரத்தைக் கையில் எடுத்து குரல் எழுப்பவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன. இதனால், கூட்டத்தொடரில் காரசார விவாதங்களுக்குப் பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், மாணவி வன்கொடுமை குறித்து கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளது அதிமுக.

இந்த நிலையில் தான் “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்துள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் “யார் அந்த சார்?” என்று அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்து வந்துள்ளனர்.

Related Post

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted by - October 19, 2024 0
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

Posted by - May 3, 2023 0
உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு…

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

இன்று கரையை கடக்கும் மாண்டஸ் புயல்.. 8 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டும் – வானிலை மையம் அலெர்ட்

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *