அட! விஜய்யின் ‘லியோ’ படத்தில் தனுஷா? வேற லெவல் தகவல் !

212 0

தளபதி விஜய்யின் லியோ படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டுவருகிறதாம். இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துவருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் ரோலேக்ஸ் என்ற வேடத்தில் சூர்யா நடித்ததுபோல, இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். ரோலெக்ஸ் அளவுக்கு அழுத்தமான வேடத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இதற்காக 15 நாட்கள் கால்ஷீட் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

Related Post

மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 7, 2025 0
3BHK சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 3BHK. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த…

‘தும்மினால் கூட செல்போனில் படமெடுத்து சோஷியல் மீடியாவ்ல போட்றாங்க’ – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Posted by - December 19, 2022 0
கடந்த ஆட்சியைவிட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கருத்து. தும்பினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர் என முதலமைச்சர்…

நீச்சல் உடையில் சமந்தா..HD படங்கள்…

Posted by - February 24, 2024 0
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த நேரத்தில் ஆன்மீகம்,…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - May 5, 2023 0
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *