சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்…கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்…முழு விமர்சனம் இதோ

261 0

சுந்தர் சி , வடிவேலு நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கேங்கர்ஸ் படத்தின் முழு விமர்சனம் இதோ

கேங்கர்ஸ்

சுந்தர் இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள கேங்கர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. கேததின் டெரஸா , வானி போஜன் , முனிஷ்காந்த் , பக்ஸ், காளை , ஹரிஷ் பேரடி , அருள்தாஸ் , சந்தான பாரதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சி சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல சூப்பர்ஹிட் நகைச்சுவை படங்களைக் கொடுத்த சுந்தர் சி வடிவேலு காம்போ கேங்கர்ஸ் படத்திலும் தொடர்கிறது. இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் .

கேங்கர்ஸ் கதை

அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் திடீரென்று காணாமல் போகிறார். இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்கள் சுஜிதா (கேதரின் டெரஸா) மற்றும் பி டி மாஸ்டர் சிங்காரம் (வடிவேலு). பின் புதிதாக வந்து சேர்கிறார் சரவணன் (சுந்தர் சி). உள்ளூர் அரசியல்வாதிகளான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் பள்ளியை தங்களது சாராய விற்பனை மற்றும் இன்னும் சில தவறான செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களை ஒவ்வொருத்தராக  மறைந்திருந்து அட்டாக் செய்கிறார்  சுந்தர் சி. ஒவ்வொரு முறை வில்லன்களை சுந்தர் சி அடித்துவிட்டு வர அந்த இடத்தில் வந்து மாட்டிக் கொள்கிறார் வடிவேலு.  இப்படி தொடரும் கதை முதல் பாதியோடு டைவர்ஷன் எடுத்து இரண்டாம் பாதியில் புதிய ரூட்டில் செல்கிறது. முக்கிய வில்லனாக வரும் ஹரிஷ் பேரடி மறைத்து வைத்திருக்கும் 100 கோடியை கொள்ளையடிப்பதே கதையாக மாறுகிறது. ஒருகட்டத்திற்கு மேல்  என்ன கதை என்பதையே மறந்து  ஆடியன்ஸை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள் கேங்கர்ஸ்.

கேங்கர்ஸ் விமர்சனம்

வடிவேலுவை முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தில் பார்க்க வேண்டும் என்கிற ஆசை சிறுசு முதல் பெருசுவரை எல்லாருக்கும் இருக்கிறது. அந்த குறையை கேங்கர்ஸ் படம் தீர்த்து வைக்கிறது. பி.டி வாத்தியார் சிங்காரமாக வரும் வடிவேலு தான் இப்படத்தின் நாயகன் என்றே சொல்லலாம். கதை ரீதியாக புதிதாக சொல்வதற்கு ஏதும் இல்லை. சமாளிப்பதற்கு ஒரு கதை , சம்பிரதாயத்திற்கு சில சண்டைக்காட்சிகள் , சம்பந்தமில்லாத ஒரு மசாலா பாடல் என சுந்தர் சி படங்களுக்கே உரிய எல்லாமும் இந்த படத்திலும் இருக்கின்றன. ஆனால் நம்முடைய ஃபோகஸ் எல்லாம் இருப்பது வடிவேலு என்கிற ஒரு நபரின் மேல்தான். துளியளவும் எனர்ஜி குறையாமல் நகைச்சுவையில் அதகளம் செய்கிறார்.

முதல் பாதியில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற காட்சிகளில் காமெடி பெரிதாக சிரிக்க வைப்பதில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் தான் நடக்கிறது உண்மையான சுந்தர் சி வடிவேலு மேஜிக். இவர்களுடன் பக்ஸ் , சந்தானபாரதி , முனிஷ்காந்த் , காளை என அனைவரும் சேர்ந்து ரகளை செய்திருக்கிறார்கள். வெவ்வேறு கெட் அப்களில் வரும் வடிவேலு துளியும் எனர்ஜி குறையாமல் படம் முழுவதும் காணப்படுகிறார். ஹீரோயிசத்தை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு எல்லா நடிகர்களிடமும் உச்சபட்ச நடிப்பை வாங்கியிருக்கிறார் சுந்தர் சி. திரையரங்கில் நடக்கும் க்ளைமேக்ஸ் காட்சி ஃபன் அன்லிமிடட். குறிப்பாக வடிவேலு மற்றும் பக்ஸ் கூட்டணி அல்டிமேட்.

கடந்த ஆண்டு அரண்மனை 4 , கடைசியாக வெளியான மதகஜராஜா என அடுத்தடுத்து இரு வெற்றிகளை கொடுத்த சுந்தர் சி தற்போது கேங்கர்ஸ் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். இறுதியாக சுந்தர் சி யுனிவர்சில் இருந்து ஒரு சின்ன ட்விஸ்ட் வைத்து கேங்கர்ஸ் 2 ஆம் பாகத்திற்கான லீட் கொடுத்து முடிகிறது படம்.

Related Post

விஜய் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.. லியோ பாடலால் எழுந்த சர்ச்சை

Posted by - June 26, 2023 0
பாடலால் சர்ச்சை லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி தான் வரவா’ விஜய்யின் குரலில் அவருடைய பிறந்தநாள் அன்று வெளிவந்தது. இப்பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சமூக…

2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

Posted by - October 8, 2024 0
2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும்…

ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

Posted by - August 4, 2025 0
ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது…

Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா

Posted by - May 14, 2024 0
Goat திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும்…

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - November 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *