அதிகாலையில் நில நடுக்கம்… மெகா சுனாமி அலர்ட்.?

207 0

ஜப்பானில் கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு வார காலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் எனவும், இதன் காரணமாக மெகா சுனாமி உருவாக வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் இன்று ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலக்கடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் சுனாமி அதிகளவில் தாக்கும் வாய்ப்புள்ள நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது. அந்த வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 20ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அவ்வப்போது சுனாமி ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.

98 அடி உயர சுனாமி அலர்ட்

இந்த நிலநடுக்கம் டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 90ஆயிரம் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் சுனாமி ஏற்படாத நிலையில், அலையின் சீற்றம் மட்டும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் மிகப்பெரிய அளவில் அதாவது 8 ரிக்​டர் அளவுகோளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டது. இதன் காரணமாக 98 அடி உயரத்திற்கு சுனாமி வர வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அரசு சார்பாக அலர்ட் விடுக்கப்பட்டிருந்த்து.

இந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது போல் இன்று ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.ஹோன்ஷுவின் பிரதான தீவில் உள்ள இவாட் மாகாணத்தில் உள்ள குஜி நகரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே 8 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது குறைவான அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 3 அடி உயரத்திற்கு மட்டுமே சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கடல்கரையோத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

Related Post

Google Pay-க்கு குட்பை? தூக்க மாட்டோம்னு சொல்லிட்டு சுந்தர் பிச்சை பார்த்த வேலை.. இனிமேல் ஒன்னு ஒன்னா மாறும்!

Posted by - June 5, 2024 0
கூகுள் நிறுவனம் அதன் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) ஆன கூகுள் வாலட்டை (Google Wallet) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்தே.. “அப்போ இந்தியாவுல கூகுள் பே ஆப்பின்…

விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள்- 40 நாட்களுக்கு பின் உயிருடன் மீண்ட அதிசயம்

Posted by - June 10, 2023 0
கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது.…

நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Posted by - December 25, 2023 0
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில்…

2026 எப்படி இருக்கும்? : பகீர் கிளப்பும் கணிப்புகள்!

Posted by - December 31, 2025 0
புதிய வருடத்தில் உலகளவில் என்ன மாற்றங்கள் நிகழும், எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்படும், இயற்கை சீற்றங்கள் பேரழிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்தெல்லாம் பாபா வாங்கா என்ன…

மீண்டும் சீண்டும் பாக்., அமைச்சர் – ”எல்லையில் ஏதாச்சும் செய்வாங்க” கண்டுக்காத இந்தியா

Posted by - October 17, 2025 0
எல்லையில் இந்தியா மோசமாக செயல்படக் கூடும் என்பதால் பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக வேண்டும் என, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பேசியுள்ளார். தாலிபன்கள் உடனான மோதலுக்கு மத்தியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *