ஜப்பான் கதிரியக்க நீரை வெளியேற்றியதும் சீனா எடுத்த அதிரடி முடிவு…!

381 0

புகுஷிமா அணுஉலை நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை ஜப்பான் இன்று பசிபிக் கடலில் வெளியேற்றியது. ஜப்பான் வெளியேற்றிய நிலையில், அந்நாட்டு கடல் உணவுகள் இறக்குமதிக்கு, சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக தடைவிதித்துள்ளனர்.

“நாட்டின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு அணுசக்தியால் அசுத்தமான நீர் வெளியேற்றத்தின் அபாயங்களைத் தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்படும்” என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உள்ளே புகுந்து மின் மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை சேதப்படுத்தியது. மேலும் சேதத்தைத் தடுக்கவும், குளிரூட்டும் அமைப்பிற்கு மாற்றாகவும் கடல்நீர் மற்றும் போரிக் அமிலம், பெரும் அளவில் அந்த ஆலைக்குள் செலுத்தப்பட்டது. இதனால் அசுத்தமான கடல் நீர் அங்கு பெருமளவில் தேங்கியது. இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டால்தான், அணுமின் நிலையத்தை செயலிழக்க செய்யும் நீண்ட பணியை அணுமின் தொழில்நுட்ப பொறியாளர்களால் செய்ய முடியும்.

ஆனால் இந்த நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த உள்ளூர் மீனவர்களும், சீனா மற்றும் தைவான் உள்ளிட்ட சில கிழக்கு ஆசிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று திட்டவட்டமாக கூறி இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் வருகிற 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர் வருகிற 24-ந்தேதி வெளியேற்றப்படும் என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

Related Post

அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு

Posted by - June 18, 2025 0
பாகிஸ்தான் ராணுவ தளபதியை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமெரிக்கா கூறிய நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப்-அசிம் முனிர் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின்…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Posted by - August 20, 2025 0
இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொல்வதற்காகச்  சீனா செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ டெல்லியில்…

ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

Posted by - November 7, 2023 0
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *