”அறம் எங்கே வெல்லும்…” – வைரலாகும் கமல்ஹாசனின் லேட்டஸ்ட் ட்வீட்

336 0

அதற்கேற்ப காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

சினிமா, அரசியல், பிக்பாஸ் என நடிகர் கமல்ஹாசன் பரபரப்பாக இயங்கிவருகிறார். இதுமட்டுமல்லாமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார். ரங்கூன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் சீசன் 6 போட்டியின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் அணிந்திருந்த உடை வைரலானது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வண்ணம் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டதும் சர்ச்சையாகி வருகிறது. விக்ரமன் அல்லது ஷிவின் இருவரில் ஒருவரே தகுதியானவர்கள் என கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மற்றொருபக்கம் சமீபத்தில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல் கலந்துகொண்டிருந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் காங்கிரஸுக்கு கமல் ஆதரவு தெரிவிப்பார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்ப காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு…!

Posted by - May 26, 2023 0
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

தேர்தல் வருதுல்ல… திட்டக்குடி பெண்களுக்கு அமைச்சரின் தீபாவளி கிஃப்ட்!

Posted by - October 11, 2025 0
பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - August 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

Posted by - July 22, 2025 0
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள…

மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் – என்னென்ன?

Posted by - December 5, 2025 0
தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் குழு 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. அதற்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *