ஆடியோ லான்ச் முக்கியமே இல்லைன்னு விஜய் போட்ட முட்டுக்கட்டை..

244 0

எப்பொழுதுமே விஜய் புது படங்களின் ஆடியோ லான்ச் திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால் கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் வேண்டாம் என்று விஜய்யே இந்த முறை முட்டுக்கட்டை போட்டு விட்டார். இதேபோல்தான் லியோவிற்கும் தடை போட்டு விட்டார் தளபதி.

கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகிறது. இதுபோக இன்று இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் என ஒரு பாடல் வெளியாக உள்ளது. இப்படி அடுத்தடுத்து இந்த படத்தை பற்றிய அப்டேட்டுகளும், பிரமோஷன்களும் கலைகட்டி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட் என தொடர்ந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். இதுபோக தனியாக ஆடியோ லான்ச் எல்லாம் வைக்க வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டார். அதுவும் போக விஜய்க்கு அரசியல் கட்சி தொடர்பான முக்கிய வேலைகள் இந்த மாதம் இருக்கிறது.

பெரிய கதைக்கே நாள் பார்த்த தளபதி

விஜய் இந்த மாதம் தனது கட்சியின் கொடியை அறிவிக்கிறார். அதற்கு இதே மாதத்தில் நல்ல நாள் பார்த்து வருகிறார், அங்கே குட்டிக்கதை இல்லை பெரிய கதையே சொல்வார். இந்த வேலைக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் தான் கோட் படத்தின் ஆடியோ லான்ச் வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார்.

கோட் படத்தில் நான்கு நாள் மட்டும் சூட்டிங் பாக்கி இருக்கிறது. அந்த காட்சிகள் அனைத்தும் சென்னையிலேயே செட் போட்டு எடுக்கின்றனர். ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் இந்த படத்தின் சூட்டிங் முடிந்து விடுமாம். ஆகஸ்ட் 15க்குள் ட்ரெய்லருக்கு உண்டான வேலைகளையும் முடித்து 19 அன்று ரிலீஸ் செய்கிறார்கள்.

Related Post

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. அசைவப்பிரியர்களே உஷார்..

Posted by - April 17, 2023 0
மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்கள் விலை வரும் நாட்கள் உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க,…

சூடான, சுவையான ‘பாப்கார்ன்’ உடல் எடை அதிகரிக்குமா? popcorn

Posted by - December 2, 2022 0
பாப்கார்ன்’ (popcorn)சாப்பிட, பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வித்தியாசம் தேவையில்லை. பொரித்து, அவித்து, வறுத்து மக்காச்சோளம் சாப்பிடப்படுகிறது. சாதாரண ஒரு கோப்பை பொரித்த மக்காச்சோளத்தில் (பாப்கார்ன்) 31 கலோரி ஆற்றலே…
storm 1 1

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - December 4, 2023 0
வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிச்சாங் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு- விடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில்…
தவெக

தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை

Posted by - May 23, 2026 0
சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்ற நிலையில் அநாகரிகமாகவும், ஒருமையிலும் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி…

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் – ஆவேசமான அமைச்சர்!

Posted by - October 15, 2024 0
ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *