‘பாரத் மாதா கி ஜே’ திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்… மேடையில் எல்.முருகன்!

273 0

கும்பகோணம் அருகே மத்திய இணையமைச்சர் முருகன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கல்யாணசுந்தரம் பேசிக்கொண்டிருக்கும் போது, பாஜகவின் கூச்சலிட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பாரத் மாதா கி ஜே' திமுக எம்பி பேசும்போது பாஜகவினர் கூச்சல்... மேடையில் எல்.முருகன்!

கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இயக்கப்பட்ட இந்த விரைவு ரயில் பாபநாசத்தில் நிறுத்தப்படாமல் சென்று வந்தது.kumbakonam

இப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ரயில்வே துறைக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று (டிச. 3) முதல் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலும், சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது.

நேற்று (டிச. 3) இரவு, சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று சென்றது. அதனை பச்சைக்கொடி அசைத்து ஒன்றிய இணை அமைச்சர் முருகன் வழி அனுப்பிவைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன்,”ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கடல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது. இது மத்திய அரசின் பரிசினை உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவெற்றியூர் பகுதியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இதனைப் போல் செங்கல்பட்டிற்கும், விழுப்புரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 250 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம்,”ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய முருகன் தமிழகத்திற்கு என்னென்ன செய்தார் என்பது பின்னாளில் கேள்விக்குறியாக இருக்கும். முருகன் அமைச்சராக இருக்கும் போது அவரால் தமிழகத்திற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தால் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.

அப்போது பாஜக தொண்டர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என முழக்கங்களோடு கூச்சலிட்டனர்.
அவர்களிடம் இந்தப் பகுதி வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என அமைச்சரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அதற்கு இடையூறாக  ஏன் கத்துகிறீர்கள் என தெரிவித்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Post

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…

தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன் கேட்கும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Posted by - April 13, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் கவலையே இல்லாமல் இருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக கோவை பாராளுமன்றத் தேர்தல்…

எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!

Posted by - December 31, 2024 0
தமிழ்த் திரையுலகினர், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏன் அமைதி காக்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது…

மழை மேகங்கள் நகரும் ரூட் இதுதான்… இந்த மாவட்டங்களில் கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை

Posted by - January 8, 2024 0
டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால்,  அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில்…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *