ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

264 0

தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை திருவிழா போல் கொண்டாடி அந்த படத்தை வெற்றி பெற வைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் வெறித்தனமாக தங்கள் அன்பை காட்டி வருகின்றனர்.

இது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் தெரிந்தோ தெரியாமலோ ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் பெயரை கெடுத்து விடுகிறார்கள். அதிலும் சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் விஜய், அஜித் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் பயங்கர வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வருகிறது.

பலரும் பார்க்கும் சோசியல் மீடியாவில் அவர்கள் மோசமான வார்த்தைகளால் பேசுவதும் சண்டையிடுவதும் என்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையே மீண்டும் ஒரு பெரிய சண்டை வெடித்திருக்கிறது. அதாவது துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான சில்லா சில்லா வரும் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் அதுவரை பொறுக்க முடியாத ரசிகர்கள் எப்படியோ அந்த பாடலின் 10 வினாடி காட்சியை தற்போது ரகசியமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் இவ்வாறு ஒரு சம்பவம் செய்திருப்பது படு குழுவினரை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. இதனால் பாடலுக்கான வரவேற்பு குறையும் என்றும் அவர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

ஏற்கனவே துணிவு திரைப்படத்தின் அப்டேட் தாமதமாக வெளியாவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த செயலை செய்தது விஜய் ரசிகர்கள் தான் என்று அஜித் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏற்கனவே விஜய்யின் வாரிசு திரைப்படத்திலிருந்து அடுத்தடுத்த போட்டோக்கள் வெளியான போதும் இதே தான் நடந்தது.

அஜித் ரசிகர்கள் தான் திட்டம் போட்டு இப்படி ஒரு வேலையை செய்ததாக விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். தற்போது அஜித்துக்கும் அதே போன்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் ரசிகர்கள் இப்படி அடித்துக் கொள்வது ஆரோக்கியமற்ற செயலாகவே கருதப்படுகிறது. இது வேறு மாதிரி சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்கள் தங்கள் அன்பை இந்த வகையில் காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

தான் நடித்த கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய்… நான் அவசரப்பட்டுட்டேன், வெங்கட் பிரபுவிடம் சொன்ன விமர்சனம்

Posted by - August 6, 2024 0
நடிகர் விஜய் நடிகர் விஜய் அவர்கள் தனது 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என பல…

18 வயதில் லிப்லாக், படுக்கையறை காட்சியில் நடித்தது ஏன்.? கூலாக பதில் சொன்ன அனிகா

Posted by - February 16, 2023 0
குட்டி பெண்ணாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அனிகா இப்போது ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்துள்ளார். 18 வயதாகும் இவருக்கு சிறுவயதிலிருந்தே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம்…

இட்லி கடை முதல் நாள் பிரம்மாண்ட வசூல்! மொத்தம் இத்தனை கோடியா

Posted by - October 2, 2025 0
தனுஷின் இட்லி கடை பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் நேற்று ரிலீஸ் ஆகி இருந்தது. படத்தில் தனுஷ், ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், பார்த்திபன்…

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

Posted by - September 26, 2023 0
ரக்ஷித் – ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா காதலித்து கரம்பிடிக்க இருந்தவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவர்களுடைய காதல், திருமணம் வரை சென்றது. ஆனால், திடீரென இந்த திருமணம்…

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

Posted by - September 29, 2023 0
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *