udhayanidhistalin

Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்

57 0

சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார். அரசியலுக்கு வந்த பிறகும் இவரது ரெட் ஜெயண்ட் நிறுவனம் தொடர்ந்து படத்தயாரிப்புகளில் ஈடுபட்டு வந்தது.

மீண்டும் நடிக்கிறாரா உதயநிதி?

இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பலரும் கருதியிருந்த நிலையில், அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தனர். ஸ்டாலின் தோல்வி அடைந்த சூழலில், சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ளார்.

எதிர்க்கட்சியாக திமுக தற்போது பொறுப்பு வகிக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிப்பாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படம் வெளியாகியது.

தயாரிப்பாளர் – நடிகர்:

ஆதவன் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். காமெடி திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் சென்று சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ஆகிய நகைச்சுவை படங்களில் நடித்தார். நடிகராக மக்கள் மத்தியில் நன்றாக சென்று சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்திற்கு பிறகு நல்ல கதைக்களம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்திருப்பார். சைகோ, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றது.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் அங்கம் வகித்தாலும் அவரை மீண்டும் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் தங்கள் கட்சி செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்துவதற்காகவும் அவர் திரைப்படங்களில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகள் சிலரும் விரும்புகின்றனர்.

காத்திருக்கும் பொறுப்புகள்:

தற்போது மு.க.ஸ்டாலினும் தோல்வி அடைந்திருப்பதால் கட்சியில் கூடுதல் பொறுப்புகளை அவர் கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பொறுப்பு வகித்தால் அவர் நடித்தால் அதற்கு கண்டனம் குவியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கட்சியின் எதிர்கால தலைவராக பல்வேறு பொறுப்புகளும் உதயநிதிக்கு இருப்பதால் அவர் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் அதை ஏற்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நடிக்க வந்தால் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் யாராவது அந்த படத்தை இயக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Related Post

சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

Posted by - July 19, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ஒரு நடிகர். இவரது படத்தை வியாபாரத்திற்கு எடுத்தால் கண்டிப்பாக லாபம் வரும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே…
thaikilavi

முதல் நாள் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்..

Posted by - February 28, 2026 0
தாய் கிழவி அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த படம் தாய் கிழவி.இப்படத்தை முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே…

விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி- அட சூப்பரு

Posted by - December 20, 2023 0
விஜய்யின் 68 லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் இப்போது வெங்கட் பிரபுவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார். விஜய்யின் இந்த 68வது படத்தின் படப்பிடிப்பு…

கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்

Posted by - October 30, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது திரைப்படம் லியோ. இதற்குமுன் இவர் இயக்கத்தில் உருவான மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து லியோ படத்தில் மீண்டும்…

பெரும் சோகம்.. காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி.. சோகத்தில் தமிழ் திரையுலகம்

Posted by - July 14, 2025 0
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *