இணையத்தில் எழுந்த ‘கருப்பு’ கிண்டல்கள்: காரணம் என்ன?

218 0

இணையத்தில் திடீரென்று ‘கருப்பு’ படத்தினை முன்வைத்து பெரும் கிண்டல்கள் எழுந்தது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெளியீடு எப்போது என்பது தெரியாமல் இருக்கிறது. இதனால் தீபாவளி வெளியீடு, பொங்கல் வெளியீடு என்ற குழப்பங்களும் ஏற்பட்டது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது.இதனிடையே கடந்த சில தினங்களாக ‘கருப்பு’ படம், சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளானது. ஏனென்றால், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்திவிட்டது. ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்று ஒரு சிறுவீடியோ பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் ‘கருப்பு’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டுக்கும் சாத்தியமில்லை என்பது உறுதியாகிறது.இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதனை முன்வைத்து பல்வேறு ரசிகர்கள் ‘கருப்பு’ படக்குழுவினரை கடுமையாக சாடினார்கள். மேலும் சிலர் பிப்ரவரி 30-ம் தேதி ‘கருப்பு’ வெளியீடு என்று போஸ்டர் ஒன்றை தயார் செய்து வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி ‘கருப்பு’ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்றும் சிலர் குறிப்பிட்டார்கள். இதனால் இணையத்தில் ‘கருப்பு’ படம் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது.விரைவில் ‘கருப்பு’ படம் எப்போது வெளியீடு என்பதை படக்குழுவினர் அறிவித்தால் மட்டுமே, இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்பது உறுதி.

Related Post

இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத விஷயம்.. துணை நின்ற ஜெயிலர்.. இதுவரை கண்டிராத வசூல் சாதனை

Posted by - August 14, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்கியிருந்தார். அளவுகடந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த…

ரீ-ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கோ’ படம்

Posted by - February 21, 2024 0
ஜீவாவின் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படமான ‘கோ’ படம் திரையரங்குகளில் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவாவின்…

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

ரஜினியை காலி செய்ய போராடும் விஜய்யின் கூலிப்படை.. பாதிக்கப்பட்ட ரஜினியின் குடும்பம்

Posted by - January 8, 2024 0
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக்கொள்வது முகம்சுளிக்க வைக்கிறது. இதை அந்த முன்னணி நட்சத்திரங்களும் கண்டிப்பதில்லை. ஒரு நடிகரை பற்றி சிறு…

சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா

Posted by - July 19, 2023 0
சமந்தா – மயோசிட்டிஸ் இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார். அதிலிருந்து கொஞ்சம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *