தமிழனா பொறந்தது தப்பா…? – மொழி சர்ச்சையை பேசும் ரெபல்

221 0

கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பதுண்டு. பாண்டி என்றால் குளிக்காதவன், சுத்தமில்லாதவன், படிக்காதவன், நாகரிகமில்லாதவன் என்று பல பொருள்கள் உண்டு. ஆகவே, அது நகைப்புக்குரிய பெயராக மலையாளிகள் மத்தியில் நிலவுகிறது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், ஜீ.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் ரெபல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கேரளா சென்று படிக்கும் தமிழக மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுத்துள்ளதாக ரெபல் படக்குழு கூறியுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பதுண்டு. பாண்டி என்றால் குளிக்காதவன், சுத்தமில்லாதவன், படிக்காதவன், நாகரிகமில்லாதவன் என்று பல பொருள்கள் உண்டு. ஆகவே, அது நகைப்புக்குரிய பெயராக மலையாளிகள் மத்தியில் நிலவுகிறது.

ரெபல் படத்தின் ஒரு காட்சியில், மாணவர் ஒருவர் தன்னுடைய பெயர் பாண்டி என்று சொல்ல, வகுப்பறையில் சிரிப்பொலி பரவுகிறது. தமிழர்களை கேரளாவில் படிக்கவிட்டதே பெரிய விஷயம் என்று வரும் வசனமும், தமிழர்கள் என்பதற்காக போலீசார் தமிழ் மாணவர்களை தாக்குவதும் படத்தில் காட்சிகளாக வருகின்றன. நாங்க தமிழனா பொறந்தது எங்க தப்பா என்று ஜீ.வி.பிரகாஷ் கேட்கும் வசனம் படம் மொழி மற்றும் இனப் பிரச்சனையை தீவிரமாக பேசும் என்பதை உணர்த்துகிறது.மலையாளிகள் தமிழர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ரொம்ப காலமாகவே உள்ளது. சமீபத்தில் மஞஞுமல் பாய்ஸ் வெளியான போதும், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவையனைத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில் இயக்குநர் ரெபல் படத்தை எடுத்துள்ளார். இறுதியில், தமிழன் ஓட்டு தமிழனுக்கே என்ற முழக்கத்தையும் முன் வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தமிழ்ப்பட ட்ரெய்லர்களில், மொழிப் பிரச்சனையை தொட்டுச் சென்றவிதத்தில் ரெபல் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. படமும் பேசப்படும் படமாக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் இருந்து உணர முடிகிறது.

Related Post

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

கனவுக்கன்னி டூ வில்லி.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி சிம்ரன்.!

Posted by - April 4, 2023 0
 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கனவு கன்னி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் நடிகை சிம்ரனின் பிறந்தநாளான இன்று அவரது திரை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.சிலையைப் போன்ற உடலமைப்பு,…

ஜனநாயகனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா விஜய்.? லோகேஷ் உடைத்த சீக்ரெட்

Posted by - July 29, 2025 0
Vijay : விஜய் இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரது கடைசி படம் தான் ஜனநாயகன் என்று கூறப்படுகிறது. இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை…

புதிய விதிகளுடன் வரும் ‘சூது கவ்வும் -2’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - April 17, 2023 0
கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா,…

2வது நாளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பிய உதயநிதியின் மாமன்னன்- செம வசூல்

Posted by - July 1, 2023 0
உதயநிதியின் மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் சாதி பெருமை பேசும் படமல்ல என்றும் சமூக நீதியை காட்டும் படம் என்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *