இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா இருக்காதீங்க..

247 0

உலகளவில் இதய நோயால் ஏராளமானோர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இறந்தும் வருகிறார்கள். இப்படி இதய நோயால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும், இறப்பதற்கும் முக்கிய காரணமாக இருப்பது உணவுப் பழக்கங்களும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் தான். மனித உடலில் இதயம் மிகவும் இன்றியமையாத உறுப்பு. இதயம் சீராக இயங்கினால் தான் மனிதன் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்

ஆனால் தற்போது நிறைய பேருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது. இப்படி இதயத்தில் ஏற்படும் அடைப்பை, கரோனரி இதய நோய் என்று அழைப்பர். இது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் தமனிகளில் ப்ளேக்குகள் உருவாகி இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையின் முதல் அறிகுறியே நெஞ்சு வலி தான். அதற்காக நெஞ்சு வலி வந்தாலே இதய நோய் என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம்.

நெஞ்சு வலி பல காரணங்களால் வரலாம். வாய்வு உடலில் அதிகமாக இருந்தாலும் நெஞ்சு பகுதியில் வலியை அனுபவிக்கக்கூடும். ஆனால் ஒருவர் அடிக்கடி நெஞ்சு வலியை சந்தித்தால், அப்போது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துவிட வேண்டும். அதுவும் நெஞ்சு வலியுடன் குறிப்பிட்ட அறிகுறிகளையும் சந்தித்தால், இதயத்தில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம்.இதயத்தில் அடைப்பு இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்.. அசால்ட்டா  இருக்காதீங்க.. | Silent Signs Of Heart Blockage You Shouldn't Ignore In  Tamil - Tamil BoldSky

நமது இதயமானது ஏதாவது பிரச்சனையை சந்தித்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதைக் கவனித்து உடனே சிகிச்சை பெறாவிட்டால், மாரடைப்புக்கு வழிவகுத்து உயிரையே பறித்துவிடும். இப்போது ஒருவரும் புறக்கணிக்கக்கூடாத சில இதய அடைப்பின் சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம். அந்த அறிகுறிகளை சந்தித்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்.

மிகுந்த உடல் சோர்வு

காரணமின்றி நீங்கள் மிகுந்த உடல் சோர்வை அனுபவிக்கிறீர்களா? அதுவும் இரவு நன்கு ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்ற பின்னரும் உடல் களைப்பாக இருக்கிறது என்றால், இதயத்தில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம். இந்த மாதிரியான உடல் களைப்பானது உடலுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுத்த பின்னரும் நீடித்திருக்கும். அதோடு எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவதிப்படக்கூடும். இப்படியான நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

தூங்குவதில் சிரமம்

தற்போது நிறைய பேர் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார்கள். இப்படி இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பதை, பலரும் தூக்கமின்மை பிரச்சனையாக இருக்கலாம் என்று நினைப்பதுண்டு. ஆனால் சில சமயங்களில் இப்படி தூங்க முடியாமல் கஷ்டப்படுவது, உடலில் உள்ள ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதுவும் தொடர்ந்து நீண்ட நாட்களாக இப்படி தூங்குவதில் சிரமத்தை சந்தித்து, மூச்சுத் திணறல், அதிகமாக வியர்ப்பது போன்றவற்றையும் சந்தித்தால், இதயத்தில் அடைப்பு உள்ளது என்று அர்த்தம்.

மூச்சுத்திணறல்

சிறிது தூரம் நடந்தால் அல்லது மாடிப்படி ஏறினால், உங்களுக்கு அதிகமாக மூச்சு வாங்குகிறதா? அப்படியானால் உங்கள் இதயம் உங்களிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று அர்த்தம். அதாவது, இதயத்தில் அடைப்பு இருப்பதைக் கூட அது உணர்த்தலாம். எனவே நீங்கள் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய நினைத்தால், சிறிது தூரம் வாக்கிங் செய்யுங்கள் அல்லது மாடிப்படி ஏறுங்கள். அப்போது அதிகமாக மூச்சு வாங்கினால், இதயத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

விறைப்புத்தன்மை பிரச்சனை

ஆம், ஆண்களுக்கு இதயத்தில் அடைப்பு இருந்தால் வெளிப்படும் ஒரு அறிகுறி தான் விறைப்புத்தன்மை பிரசசனை. சொல்லப்போனால் இது ஆண்களுக்கு இதயத்தில் உள்ள அடைப்பை உணர்த்தும் ஒரு ஆரம்பகால அறிகுறி என்றே கூறலாம். ஏனெனில் ஆணுறுப்புக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் போனால் தான் விறைப்பதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே ஒரு ஆண் இந்த ஒரு அறிகுறியைக் கொண்டே இதய பிரச்சனையை தெரிந்து கொள்ளலாம்.

அசாதாரண பகுதிகளில் வலி

உங்கள் தாடை, தோள்பட்டை, கை அல்லது முதுகு பகுதியில் வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இதயத்தில் ஏதோ ஒரு தீவிரமான பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்த இடங்களில் எல்லாம் வலியை சந்தித்தால், அதை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் இந்த வலிகள் அனைத்தும் இதயம் உங்களுக்கு வெளிப்படுத்த நினைக்கும் அறிகுறிகளாகும்.

Related Post

10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..

Posted by - November 16, 2023 0
10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 01 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும்…

உங்க வயித்துல ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப அது ஆபத்தான வயிற்று புற்றுநோயா இருக்கலாமாம்..!

Posted by - November 10, 2023 0
வயிற்று உப்புசம் மற்றும் வீக்கம் பெரும்பாலும் எல்லாருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்சனை. ஆனால், சில நேரங்களில் இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வயிற்றுப் புற்றுநோய், இரைப்பை…

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க!

Posted by - November 3, 2023 0
இன்றைய நவநாகரீக உலகில், கைகளால் சாப்பிடுவது கெளவுரவ குறைச்சலாகவும், ஸ்பூன் மற்றும் முட்கரண்டியில் சாப்பிடுவது ஸ்டைலாகவும் நாகரீகமாகவும் கருத்தப்படுகிறது. உண்மையில், இவை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய…

Mohan G Arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைப் பேச்சு.. இயக்குநர் மோகன் ஜி கைது!

Posted by - September 24, 2024 0
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *