Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

இந்தி சர்ச்சை | “சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் உங்கள் மகளிடம் கேளுங்கள்” – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

171 0

“சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதை முதல்வர் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்” என 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிகள் கட்டாயமாக்கும் விவகாரத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மத்திய அரசின் நோக்கங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு விஷயத்தைப் பற்றிப் புகார் கூறுவது மு.க.ஸ்டாலினின் வாடிக்கை. 2026-27 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டத்தின் (பகுதி-1) படி, 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவின் தாய்மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வழங்கப்படவுள்ள மொழிகளைத் தெளிவுபடுத்தும் வகையில், இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளும், பிற இந்தியப் பிராந்திய மொழிகளுடன் சேர்த்து வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தி திணிக்கப்படுவது பற்றிய கேள்வி எங்கே எழுகிறது?

கடந்த ஆண்டு, பள்ளிக்கல்வியின் அடித்தள மற்றும் ஆயத்த நிலைகளின் போது தாய்மொழி அல்லது வீட்டு மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்கு சிபிஎஸ்இ முக்கியத்துவம் அளித்தது.

சிபிஎஸ்இ பள்ளி நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பள்ளியில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா என்பதையும் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தும் தனது அமைச்சர்கள் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகளிடமும் அவர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

முன்பெல்லாம் உங்கள் தவறான வாதங்களை வெளிப்படுத்த சில நாட்களாவது தேவைப்பட்டது. ஆனால், இப்போதோ, மிகச் சிறிய ஆய்விலேயே உங்கள் பொய்யான வாதங்கள் வெளிப்பட்டுவிடுகின்றன’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

இது என்னங்க புது ட்விஸ்டு : சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்..!!

Posted by - March 13, 2024 0
நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது கட்சியை தேசிய கட்சியான பாஜகவுடன் இணைத்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை செய்தியாளர்களிடம் தெரிவித்த சரத்குமார் கூறியதாவது:…
dmk mks

“குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” – தவெக மீது ஸ்டாலின் தாக்கு

Posted by - May 25, 2026 0
சென்னை: “தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதன்மூலம், ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக…
Generated Image January 09 2026 10 54AM

பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக?

Posted by - January 21, 2026 0
தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றை வாங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக…
ASDFGH

செம அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! ஏன்?

Posted by - February 17, 2026 0
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *