இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

125 0

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து, இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

2022ம் ஆண்டு தொடங்கிய ரஷ்ய – உக்ரைன் போர், 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த 3 வருடங்களாக அமைதியாக இருந்துவிட்டு, தற்போது போரை நிறுத்தியே தீருவேன் எனக் களத்தில் இறங்கியுள்ளது அமெரிக்கா.

ஆனால், இந்த போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்படவில்லை. எனவே, ரஷ்யாவுடன் யாரும் வர்த்தகம் செய்யக்கூடாது எனவும், மீறி வர்த்தகம் செய்தால் கடுமையான வரிகள் விதிக்கப்படும் எனவும் டிரம்ப் மிரட்டி வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், இந்தியாவிற்கு 50 சதவீதம் வரியையும் அவர் விதித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டல் எல்லாம் அப்பட்டமான நாடகம் என்ற விமர்சனம் தொடக்கம் முதலே இருந்து வருகிறது. ஏனெனில், இந்தியாவைக் காட்டிலும், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனுமே ரஷ்யாவுடன் அதிக வர்த்தகம் செய்துள்ளன. அவை கடந்தாண்டு ரஷ்யாவுடன் செய்த ஏற்றுமதி இறக்குமதிகளைப் பார்த்தாலே போதும். அமெரிக்காவின் நாடகம் புலப்பட்டு விடும்.

2024ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் 70 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது 61 லட்சம் கோடி ரூபாயாகும். இது இந்தியா மேற்கொண்ட வர்த்தகத்திற்கு இணையானது. எரிபொருள் மட்டுமல்ல ரசாயனங்கள், உலோகங்கள், உணவுப்பொருட்கள், இயந்திரங்கள் என பலவற்றை
ஐரோப்பிய யூனியன் இறக்குமதி செய்துள்ளது.

இதில், ரஷ்யாவுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்ட ரசாயன வர்த்தகம் மட்டும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். ஆனால், இந்தியா 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ரசாயன வர்த்தகம் செய்துள்ளது. அதாவது, இந்தியாவைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாக ஐரோப்பிய யூனியன் வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உலோக வர்த்தகம் மேற்கொண்ட நிலையில், இந்தியா வெறும் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே வணிக தொடர்பு கொண்டிருந்தது. இப்போது கூறியவை அனைத்துமே வெறும் இறக்குமதி பற்றியவைதான்.

கடந்தாண்டு மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா செய்த ஏற்றுமதியை விட 7 மடங்கு அதிகமாகும். இன்று இந்தியாவை மிரட்டி வரும் அமெரிக்காவும் ரஷ்யாவுடன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் இருந்துள்ளது.

new project 2025 08 07t174433.849

2024ம் ஆண்டு 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. எதிரி நாடான ரஷ்யாவிடமே இத்தனை தொகைக்கு வர்த்தகம் செய்துள்ளது என்றால், நட்பு நாடான உக்ரைனுடனான வர்த்தக தொடர்பு பல லட்சம் கோடி இருக்கும் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டும்தான் உக்ரைனிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.

இப்படி, பல ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்த அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தான் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக வாள் சுழற்றுகின்றன. இதனைச் சுட்டிக்காட்டி, அமெரிக்கா பேசுவது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related Post

அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் – ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

Posted by - July 7, 2025 0
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் அமெரிக்காவின் சரிநிகர் வரி விதிப்பு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஈரான்…

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Posted by - August 20, 2025 0
இந்த மாத இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொல்வதற்காகச்  சீனா செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ டெல்லியில்…

எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்…

Posted by - May 7, 2025 0
இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூரால், பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன் முழு விவரங்களை பார்க்கலாம். பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதற்கு பதிலடியாக,…
qq

எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது!

Posted by - March 4, 2026 0
ஈரான் முதலில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததற்கான தகவல்கள் இல்லை என அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் கூறியிருக்கிறது. ஈரானால் இஸ்ரேலுக்குத்தான் அச்சுறுத்தலே தவிர, அமெரிக்காவுக்கு அல்ல என்று…

பக்கா ஸ்கெட்ச்.. வணிக வளாகத்தில் வன்முறை, கோடிக்கணக்கில் கொள்ளை.. 50 பேர் கும்பல் வெறிச்செயல்

Posted by - August 15, 2023 0
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *