இளம் கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?

234 0

தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து விஜய் ஜோடியாக வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த புஷ்பா படம் ராஷ்மிகாவின் சினிமா பயணித்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்தி மொழி படங்களிலும் நடிக்கிறார்.இளம் கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்? | Tamil cinema actress rashmika  love with famous cricket player

ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை ராஷ்மிகா காதலித்தார். 2017-ல் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் அடுத்த வருடமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை ரத்து செய்து பிரிந்தனர். பின்னர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைத்து பேசப்பட்டார். இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்று வந்ததாகவும் கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தார்கள்.

இந்நிலையில் 23 வயது இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது 26 வயது ராஷ்மிகாவுக்கு காதல் ஏற்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் சுப்மன் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆமாம் என்று கண்ணடித்தபடி சிரித்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. சுப்மனும் ஏற்கனவே ராஷ்மிகா மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

Generated Image November 25 2025 6 44PM

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா இப்படிதான் நடக்குமா.

Posted by - December 16, 2025 0
இசை வெளியீட்டு விழா விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவாக மட்டுமின்றி விஜய்க்கு…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

கனவுக்கன்னி டூ வில்லி.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி சிம்ரன்.!

Posted by - April 4, 2023 0
 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கனவு கன்னி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் நடிகை சிம்ரனின் பிறந்தநாளான இன்று அவரது திரை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.சிலையைப் போன்ற உடலமைப்பு,…

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்!

Posted by - December 9, 2022 0
இந்த ஆண்டில் youtube-ல் பிரபலமான இந்திய பாடல்களில் விஜய் பட பாடல் இடம்பிடித்துள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தாலும் மக்களிடத்தில்…

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *