உங்க வீட்ல இட்லி மாவு இருக்கா… அப்போ வாங்க மொறு மொறு கார போண்டா செய்யலாம்.!

227 0

நாம் இன்று இங்கே பார்க்கப்போகும் ரெசிபியானது வீட்டில் உள்ள இட்லி மாவை வைத்து சூடான மொறு மொறு போண்டா எப்படி செய்யலாம் என்று தான்.

ஒரு சிலருக்கு மாலை நேரங்களில் ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அதில் முக்கியமான ஒன்று போண்டா. பொதுவாக போண்டாக்களில் இனிப்பு போண்டா, கார போண்டா, மசால் போண்டா, மிளகு போண்டா என பல வகை உண்டு என பல வகைகள் உண்டு.

சிலர் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களில் போட்டு பொரித்த போண்டா வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் கிடைக்கும் போண்டாக்களை வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று நீங்கள் யோசித்தீர்கள் என்றால் உங்களுக்காக தான் இந்த ரெசிபியே…

நாம் இன்று இங்கே பார்க்கப்போகும் ரெசிபியானது வீட்டில் உள்ள இட்லி மாவை வைத்து சூடான மொறு மொறு போண்டா எப்படி செய்யலாம் என்று தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தத இந்த போண்டாவை மழைக்காலங்களில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

  • இட்லி மாவு – 2 கப்
  • அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • ரவை – 1 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 1/4 கப்
  • பூண்டு – 2 சிறிய பல்
  • காய்ந்த மிளகாய் – 3
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • நறுக்கிய கறிவேப்பிலை

 

செய்முறை :

  1. முதலில் தேவைவையான காய்ந்த மிளகாயை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  2. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த காய்ந்த சிகப்பு மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து சிறிதளவு தண்ணீருடன் நன்றாக மசிய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  3. அடுத்து ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கொள்ளுங்கள்.
  4. பிறகு அதில் அரிசிமாவு மற்றும் ரவை நன்றாக கலந்துவிட்டு 10 நிமிடங்களுக்கு மூடி போட்டு ஊறவிடவும்.
  5. அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக பொரியவிடவும்.
  6. பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
  7. பிறகு அத்தை கலந்துவைத்துள்ள மாவில் போட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
  8. அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து போண்டா பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  9. எண்ணெய் சூடானதும் தீயை குறைத்து கலந்தது வைத்துள்ள மாவை கொண்டு தேவையான அளவிற்கு ஏற்ப போண்டாவை போடவும்.
  10. மாவு ஓரளவிற்கு உப்பி எண்ணெய் மேல் மிதந்து வந்தததும் அதை திருப்பி போட்டு வேகவிடவும்.
  11. போண்டா நன்றாக பொன்னிறமாக வெந்து மொறு மொறுவென்று ஆனவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்தால் காரசாரமான இட்லி மாவு போண்டா ரெடி..

Related Post

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. சினிஉலகம் நடத்திய Voting Poll Result இதோ

Posted by - November 4, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போட்டியாளர்களின் யார் வெளியேறுவார் என்பதை கணிக்கும் விதமாக நமது சினிஉலகம் Website-ல் Voting Poll…

மீல் மேக்கரை வெச்சு இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புட்டு செய்யுங்க.. சும்மா அள்ளும்…

Posted by - September 15, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா…

குழந்தையிலேயே ஏன் காது குத்துகிறார்கள் தெரியுமா..? தெரிந்து கொள்ளுங்கள்..

Posted by - March 9, 2024 0
பெரும்பாலான குடும்பங்களில், குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது, காது குத்துவார்கள். சிலர், 5வது அல்லது 7வது மாதம் அல்லது ஒரு வயதுக்கு கொஞ்சம், 10வது அல்லது…

உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க தண்ணீர் மட்டும் போதாது.. இவற்றையும் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தும் நிபுணர்..!

Posted by - April 19, 2023 0
தண்ணீருக்கு பல நன்மைகள் இருக்கும்போது, அதிகபட்ச நன்மைக்காக அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? என்பதை தற்போது நாம் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலம் வந்தாச்சு. வெயிலும்…

பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்.. யார் தெரியுமா?

Posted by - October 12, 2023 0
பிக் பாஸ் 7 கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை விட 7…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *