உருளைக்கிழங்கை இப்படி செட்டிநாடு ஸ்டைலில் ரோஸ்ட் செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..

328 0

உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை சமைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.உருளைக்கிழங்கை இப்படி செட்டிநாடு ஸ்டைலில் ரோஸ்ட் செய்யுங்க.. செம சூப்பரா  இருக்கும்.. | Chettinad Style Urulaikizhangu Roast Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* பேபி உருளைக்கிழங்கு – 1 1/2 கப் (வேக வைத்து, தோலுரித்தது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* புளிச்சாறு – டேபிள் ஸ்பூன்

* வெல்லம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – தேவையான அளவு

செட்டிநாடு மசாலாவிற்கு…

* மல்லி விதை – 1 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* பட்டை – 1 இன்ச்

* ஏலக்காய் – 1 * கிராம்பு – 4

* வரமிளகாய் – 4

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிவிட்டு, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள மல்லி, கறிவேப்பிலை, வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து, பின் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் கிளறி வேக வைத்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.

Related Post

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

ஓவர் போதையில் நடிகைக்கு நடந்த அந்தரங்க டார்ச்சர்.. அரசியல் நடிகரால் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்

Posted by - January 30, 2023 0
முன்பெல்லாம் இலை மறை காயாக இருந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம் தற்போது பகிரங்கமாக நடிகைகளை துன்புறுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவம் அனைவருக்கும் பதட்டத்தை…

இரண்டாம் திருமணம், 6 மாதம் கர்ப்பம்.. குட் நியூஸ் சொன்ன மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி..

Posted by - July 28, 2025 0
மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கடந்த சில காலமாகவே…

TRP-யை உயர்த்த மீண்டும் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்கள்.. எதுல தெரியுமா?

Posted by - November 12, 2024 0
சன் டிவி விஜய் டிவி எத்தனையோ சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பி வந்தாலும், ஹிந்தி டப் சீரியல்கள் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வம் இன்னும் குறைந்த பாடில்லை.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *