எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் உருக்கம்

427 0

விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது .

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 7 வருடங்களுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக படப்பிடிப்பை தொடர்வதற்கு சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று ( நவம்பர் 24ஆம் தேதி ) படம் வெளியாகும் என இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் படத்தின் மீது இருக்கும் கடன் சிக்கல்களை முடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். முதலில் 120 கோடி ரூபாயாக இருந்த கடன்  பிரச்னையை 80 கோடி ரூபாய் என்று அளவிற்கு கொண்டு வந்தார்.அதற்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறவில்லை. கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கடன் கொடுத்தவர்கள் தங்களுக்கு கடனை திருப்பித் தராமலோ அல்லது அதற்கான உத்தரவாதத்தை வழங்காமலோ படத்தை வெளியிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்காக வழக்கும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதேசமயம் இந்த வெளியீட்டு தேதியை விட்டு விட்டால் வேறு நல்ல தேதி கிடைக்காது என்ற அச்சத்தில் இருந்த நிலையில் , நிச்சயம் இன்று படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் படத்தின் மீதான சிக்கல்கள் முடியவில்லை. தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரையரங்குகளும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை.  திரையரங்க உரிமையாளர்கள் துருவ நட்சத்திரத்தின் தயாரிப்பாளர் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

Related Post

முதல் மரியாதை பட நடிகை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?

Posted by - May 28, 2024 0
ரஞ்சினி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ். இவர்…

விடாமுயற்சிக்கு வந்த விமர்சனம்.. அஜித், தயாரிப்பாளர் ரியாக்ஷன் இதுதான்: மகிழ் திருமேனி பேட்டி

Posted by - February 11, 2025 0
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க அசர்பைஜான் நாட்டில் நடப்பது போன்ற கதை தான். அஜித் மனைவி…

ஷப்பா முடியல, நீங்கள் எல்லாம் எப்படி வாழ்கிறீர்களோ… நடிகை த்ரிஷா போட்ட பதிவு, யாரை கூறுகிறார்?

Posted by - April 11, 2025 0
நடிகை த்ரிஷா நடிகை த்ரிஷா நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது. அப்படத்திற்கு பிறகு அஜித்துடனே மீண்டும் இணைந்து குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தார்.…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்

Posted by - July 24, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *