எப்போதும் கோபம், எரிச்சலா இருக்கா..? இந்த விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம்..!

281 0
கடந்த காலத்தில் நீங்கள் சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தால், எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கோபம் வரலாம்.கோபம் என்பது எதிர்மறை சூழலுக்கு நம்முள் இருந்து வெளிப்படும் இயற்கையான உணர்ச்சியாகும். சில நேரங்களில் நம்மை புண்படுத்திய ஒன்றைப் பற்றி உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஆரோக்கியமான வடிகாலாக கோபம் இருக்கிறது.ஓரளவிற்கான கோபம் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும். ஆனால் குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லாமல் நீங்கள் அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத கோபம், எரிச்சலாக அல்லது ஆக்ரோஷமாக இருப்பதை போல உணர்ந்தால் ஒருகட்டத்தில் அதுவே உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறும். கோபத்தை நிர்வகிப்பதில் நீங்கள் சிக்கல்களை எதிர்கொண்டால் அடிக்கடி எரிச்சல் அல்லது கோபப்படுவதற்கான அடிப்படை காரணங்கள் என்ன என்பதை முதலில் நீங்கள் கண்டறிவது அவசியம்.வெளிப்படையான காரணங்கள் எதுவும் இல்லாமல் அடிக்கடி நீங்கள் கோபம் கொள்பவர் என்றால், அதன் பின்னணியில் உங்களுக்கே தெரியாமல் இந்த அடிப்படை காரணங்கள் இருக்கலாம்.உங்களது மனஅழுத்த சூழல் : அறியப்படாத அல்லது வெளிப்படையான காரணங்கள் இல்லாமல் நீங்கள் கோபப்படுகிறீர்கள் என்றால் அதற்கு பின்னால் உங்களுக்கு அப்போதிருக்கும் மனஅழுத்தம் மிகுந்த சூழல் காரணமாக இருக்கலாம். வேறு ஏதாவது ஒரு விஷயம் உங்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கும் நிலையில், அதையே யோசித்து கொண்டிருக்கும் நீங்கள் அதன் அழுத்தம் காரணமாக விரக்தியாக அல்லது எரிச்சலாக உணரலாம். அதை கட்டுப்படுத்த தெரியாமல் நீங்கள் வழக்கத்தை விட அதிக கோபத்தை வெளிப்படுத்த கூடும்குடும்ப உறுப்பினர்கள் : உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமற்ற சூழலை நீங்கள் சமாளித்து கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எப்போதும் கோபம் மற்றும் எரிச்சலாக உணர அதுவே ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து கோபம் உள்ளிட்ட பல பழக்கங்களை கற்று கொள்கிறார்கள். சிறு வயதில் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் அல்லது தாத்தா, பாட்டியிடம் அடிக்கடி திட்டு வாங்கி தண்டனைகளை அனுபவித்திருந்தால், தற்போது நீங்கள் பெரியவர்களாக வளர்ந்த பின் நீங்களும் இந்த பழக்கத்தை பின்பற்ற கூடும். இதற்கு பரம்பரை தான் காரணம் என நீங்கள் தவறாக நினைத்து கொண்டிருக்க கூடும்.

Related Post

பிரேம்ஜியை புறக்கணித்து பிரபல நடிகர் மகன் திருமணத்திற்கு சென்ற இளையராஜா! குடும்பத்தில் பிரச்சனையா?

Posted by - June 13, 2024 0
நடிகர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 45 வயதாகும் பிரேம்ஜிக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மிக சிம்பிளாக நடந்தது. இந்து என்ற பெண்ணை கரம்பிடித்த…

2025-ல் Electric Bike வாங்கலாமா? Mileage, Battery Cost, Charging Time… Experts சொல்லும் உண்மையான தகவல்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025-ஐ enter பண்ணியதும் India முழுக்க electric bike (EV) market வேகமா வளர்ந்து கொண்டே இருக்கு. ஆனா இன்னும் பெரும்பாலோருக்கு ஒரே சந்தேகம் –…

தோசை மீந்துருச்சா..? கவலை வேண்டாம்.. 5 நிமிடத்தில் கொத்து தோசை ரெசிபி.!

Posted by - December 28, 2022 0
தோசை இருக்கிறது ஆனால் தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் இல்லை என்கிறவர்களுக்கு இந்த கொத்து தோசை ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.. தோசை பிடிக்காதவர்களை நம்மால் அவ்வளவு…

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

Posted by - April 13, 2024 0
டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி…

பிக் பாஸ் 9ல் இந்த நடிகரின் மனைவி கலந்துகொள்கிறாரா? அப்போ செம Fun இருக்கு

Posted by - August 30, 2025 0
பிக் பாஸ் 9 செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே பிக் பாஸ் குறித்த பேச்சு எங்கு திரும்பினாலும் இருக்கும். எப்போது ஆரம்பம், யார்யாரெல்லாம் பங்குகொள்ள போகிறார்கள், அவர்களுடைய சம்பளம் என்ன என்பது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *