“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

276 0

இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட சீமான், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அவர், மற்ற மொழிகளை கற்பதைதான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் மொழிகளை திணிப்பதை மட்டுமேதான் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேள்வி எழுப்பியவர், இட ஒதுக்கீடு வேண்டும் எனில் அவர்கள் பின் தங்கிய வகுப்புக்கு தங்களை மாற்றிக் கொள்ளட்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளரிடம் பேசிய சீமானிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்து பேசியவர் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார்.

Related Post

f

tvk vijay:விழி கவரும் அரசியல் பரபரப்பு! Election day..

Posted by - April 23, 2026 0
நடிகர் மற்றும் Vijay தனது கட்சியை தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட அரசியல் பரபரப்பு, தேர்தல் நாளிலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல இடங்களில், டிவிகே தலைவர்…
qw

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

Posted by - May 6, 2026 0
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறப்போகும் நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா,…

சந்தி சிரிக்கும் சட்ட-ஒழுங்கு? கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்? வெயிட்டிங்கில் எதிர்க்கட்சிகள்

Posted by - April 28, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட-ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்க பதில் அளிக்க உள்ளதால், சட்டசபையில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை…
vvv

ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!

Posted by - March 16, 2026 0
கேரளா, பாண்டிச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாத காலம் கூட இல்லாததால் அங்குள்ள அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக களப்பணியைத்…
add an exclusive news banner at the top of the ima

முதல்வராக விஜய் பதவியேற்பு விழா.! ஒட்டுமொத்தமாக புறக்கணித்த திமுக, அதிமுக- காரணம் என்ன.?

Posted by - May 10, 2026 0
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் திமுக, அதிமுக ஆகிய கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *