ஐந்து உறுதிமொழிகள்.. தவெக கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தல்

216 0

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். எனினும், பாராளுமன்ற தேர்தலை தவிர்த்துவிட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார்.

இதன் பின்னர் கட்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று கட்சியினருடன் விவாதம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அப்போது கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை வழங்கியதாகவும் தெரிகிறது. இதுதான் தற்போது விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐந்து உறுதிமொழிகள் பின்வருமாறு:-

நாட்டின் விடுதலைக்காகவும், நம் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னை தமிழ்மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவை ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராக செயல்படுவேன்.

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.இந்த உறுதிமொழியை கட்சியினர் அனைவரும் ஏற்று கடைபிடிக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தியுள்ளார்.

Related Post

மூக்கிரட்டை இலை.. சிறுநீரக நோய்களை விரட்டியடிக்கும் மூலிகை நண்பன்.. அருமையான மூக்கிரட்டை கீரை சூப்

Posted by - December 11, 2023 0
சென்னை: சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காக்கக்கூடியது மூக்கிரட்டை கீரைகள்.. இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன? சத்தான மூக்கிரட்டை ரசம் எப்படி செய்வது தெரியுமா?மூக்கிரட்டையை, மூக்கரட்டை கீரை என்பார்கள்..…

விஜய் மீது செருப்பு தூக்கி வீசிய நபர்.. செருப்பால் அடிக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை

Posted by - December 29, 2023 0
அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் நேற்று இரவு விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் வந்திருந்தார். இவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பும் போது,…

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா ஜே.என்.1.. பரபரக்கும் ஆய்வுகள்!

Posted by - December 28, 2023 0
சென்னை: தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஜே.என். 1…

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

Posted by - October 14, 2024 0
கனமழை எச்சரிக்கையை அடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம்

Posted by - February 20, 2023 0
மயில்சாமி மறைவு மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது, கண்ணீரில் குடும்பம் நடிகர் மயில்சாமி நேற்று உடல்நல குறைவு காரணமாக காலமானார். திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *