2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு.. தவெக அறிவிப்பு

296 0

சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட உடனேயே கட்சியை கட்டமைக்கும் பணிகளை விறுவிறுவென மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து கூட்டம் முடிந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அதனுடன் இணைந்து நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதை பயன்படுத்தியே உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பாக செய்து 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

சாம் பிட்ரோடா பதவி நீக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ள சர்ச்சை

சாம் பிட்ரோடா பதவி நீக்கம்: அயலக காங்கிரஸ் கோரிக்கை

Posted by - நவம்பர் 20, 2026 0
சாம் பிட்ரோடா சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கும் மத்தியிலும், காங்கிரஸ் கட்சியின்…
%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி

Posted by - மே 29, 2026 0
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற பயணத்தில் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் யாருமே இடம்பெறாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.…

விசிக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுமா? திமுகவின் மூவ் என்ன?

Posted by - மார்ச் 2, 2024 0
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல்…
Gemini Generated Image r7rbbvr7rbbvr7rb

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - ஏப்ரல் 7, 2026 0
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம்…
dmk pmk

Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக – ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி – CM விஜய்க்கு கோரிக்கை

Posted by - ஆகஸ்ட் 14, 2026 0
Anbumani On CM Vijay: தமிழ்நாட்டில் தனியார் தொழிற்சாலைகளில் 80 சதவிகித வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க, சட்டம் இயற்ற வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு அன்புமணி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன