ஓசி பஸ் சர்ச்சை.. வாய்விட்டு மாட்டிய எம்.எல்.ஏ.. திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நகேந்திரன்..

236 0

பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக MLA-ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

பெண்கள் ஓசி பஸ்ஸில் போவதாக திமுக MLA பேசியது பூகம்பமாக வெடித்துள்ளது. பொன்முடி சம்பவத்தை வைத்து திமுக மீது அட்டாக் செய்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு:

தேனி மாவட்டம் மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி திமுக MLA மகாராஜன் திறந்து வைத்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம்.அதில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்று கூறினார். ஓசி பஸ் பயணம் என சொல்லியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே பொன்முடி ஓசி பஸ் என சொன்னது சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டும் திமுக எம்.எல்.ஏ இப்படி சொல்லியிருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

பொன்முடியை வைத்து சாடல்:

இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில், ‘கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை “ஓசி” என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை “ஓசி” என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் “ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க” என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் “அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000” என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

அதிகார மமதை இனியாவது திருந்தட்டும்:

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை “ஓசி” என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்! ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்? அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்” என விமர்சித்துள்ளார்.

Related Post

யூ டியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமினில் விடுதலை: மீண்டும் பைக் ஓட்டுவேன் என்கிறார்

Posted by - November 4, 2023 0
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை…

சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்? ஞாயிறு இரவு நடந்தது என்ன?

Posted by - December 8, 2023 0
சென்னை: சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் கீழ்கட்டளை பகுதிகள் வெள்ளத்தில் சிக்க என்ன காரணம் , ஞாயிறு இரவு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.. ஞாயிறு அன்று காலை…

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

ஆட்டம் காணும் திமுக? அமைச்சர் கே.என். நேரு, மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – நெருங்கும் தேர்தல்

Posted by - April 7, 2025 0
தமிழக அமைச்சர் கே.என். நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கே.என். நேரு…
45

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *