“என்னால புரிஞ்சுக்க முடியல” கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி

264 0

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே ஒரு முறை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பின்னர், மத்திய அரசு கேட்டபடி திருத்தி மீண்டும் அனுப்பப்பட்ட கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

“அறிக்கையை வெளியிட சிறிதும் தயங்கவில்லை”

இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் மாறி மாறி குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில், கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு எக்ஸ் தளத்தில் தமிழில் பதில் அளித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை.

உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால், இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்:

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

 

 

தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Post

பெங்களூருவில் ஆன்லைனில் ‘பிரிட்ஜை’ விற்க முயன்று ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த என்ஜினீயர்

Posted by - July 1, 2023 0
பெங்களூரு : பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில்…

போலீஸ் உடையில் இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி என்ஜினீயரிங் மாணவியுடன் உல்லாசம்- வீடியோ எடுத்து மிரட்டிய நாடக நடிகர்

Posted by - August 11, 2023 0
திருப்பதி: கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 19 வயது மாணவி படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யமனூரா (வயது 22) என்பவர் போலீஸ்…

கோவிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை கன்னத்தில் அறைந்த பக்தர்- பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் பரபரப்பு

Posted by - August 9, 2023 0
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர்…

டாக்டர் அம்பேத்கரின் சமத்துவம், கண்ணியம் அயராத போராட்டம் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடி புகழாரம்!

Posted by - December 6, 2024 0
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: “மகாபரிநிர்வான் திவாஸ் அன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக நீதியின் கலங்கரை விளக்கமுமான டாக்டர் பாபாசாகேப்…

Gpay, Phonepay பயன்படுத்துறீங்களா..? வருது புதிய கட்டுப்பாடுகள்!

Posted by - December 20, 2022 0
இதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பி வந்த நிலையில், தற்போது பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் யுபிஐ ஆப்கள் மூலம் நடைபெறும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *