கங்குவா படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

164 0

கங்குவா

இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யாவின் நடிப்பில் திரைக்கு வரும் படம் இதுவே ஆகும்.

இதனால் கங்குவா படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அடுத்த மாதம் 14ஆம் தேதி கங்குவா படம் வெளிவரவிருக்கும் நிலையில், பாலிவுட்டில் தற்போதே படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு துவங்கிவிட்டன.

இந்த நிலையில், பாடலாசியர் மதன் கார்க்கி கங்குவா படத்தை முழுமையாக பார்த்துவிட்டு, தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல் விமர்சனம்

 

இந்த பதிவில் ” இன்று கங்குவா படத்தின் முழுப் பதிப்பை பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

காட்சிகளின் பிரம்மாண்டம், கலையின் நுணுக்கமான விவரங்கள், கதையின் ஆழம் மற்றும் இசையின் கம்பீரம் அனைத்தும் ஒரு பவர்ஹவுஸ் நடிகர் சூர்யாவுடன் இணைந்து உருவாக்கிய மிகச்சிறந்த கலை படைப்புகளில் ஒன்றாகும். இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு மனமார்ந்த நன்றி ” என தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.மதன் கார்க்கி தெரிவித்துள்ள விமர்சனத்தின்படி படம் வெறித்தனமாக வந்துள்ளது என தெறிக்கிறது. கண்டிப்பாக நவம்பர் 14ஆம் தேதி சூர்யா ரசிகர்கள் சிறப்பான விருந்து காத்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 

 

 

Related Post

“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

Posted by - January 4, 2024 0
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு…

ரஜினி – கமல் இணையும் படம்.. விருது விழாவில் உறுதி செய்த கமல்! – என்ன கூறினார் பாருங்க

Posted by - September 8, 2025 0
சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வருகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்…

டிஜிட்டலில் மீண்டும் வெளியான அஜித்தின் ’வாலி’

Posted by - February 28, 2024 0
சென்னை: பழைய படங்களை டிஜிட்டலில் மாற்றி மீண்டும் வெளியிடும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது. வாரணம் ஆயிரம், விஜய்யின் கில்லி, அஜித்தின் பில்லா, விஜய் சேதுபதியின் 96 உட்பட…

ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

Posted by - August 12, 2024 0
விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நோ சொன்ன ரஜினிகாந்த்.. காரணம் என்ன?

Posted by - February 18, 2025 0
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து ரஜினி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *