விஜய், அஜித் போட்டி எங்கே ஆரம்பித்தது?

274 0

விஜய் அஜித் இருவரும் இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர். இருவர் போட்டி போடுகிறார்களா இல்லையோ, ஆனால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், இவர்கள் போட்டி க்கு சினிமா காரணமா அல்லது நடிகை காரணமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது.ஆரம்ப கட்டத்தில் விஜய் நடிக்க முயற்சிக்கையில் அவர் அப்பாவிடம் ரஜினி பட வசனங்களைப் பேசிக்காட்டி நடித்திருக்கிறார். பின் நாளைய தீர்ப்புன்னு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். முதல் படம் பெரும் பிளாப். பத்திரிக்கையாளர்கள் பயங்கரமாக விமர்சிக்கின்றனர். டைரக்டர் மகன் என்றால் ஹீரோவாகிடணுமா, இவன் மூஞ்சியை எல்லாம் காசுகொடுத்து பார்க்கணுமா என்று எழுதியிருக்காங்க. இதைப் படிச்ச எஸ்.ஏ.சந்திரசேகர், பயங்கரமா எமோஷனல் ஆகிறார்.

பெல்ட்டால் அடி வாங்கிய விஜய்

இந்த கடுப்பில், விஜயை பயங்கரமாக திட்டுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். மேலும், அப்போது அவர் அப்பாவிடம் பெல்ட்டில் அடிவாங்குகிறார், நடிகர் விஜய். இந்த நிலையில், ஒரு பெரிய நடிகரின் படத்தில் விஜய் நடித்தால் தேறிடுவார் என்று சத்யராஜை அப்ரோச் பண்றாங்க. ஆனால், அவர் செம்ம பிசி.

அந்த தருணத்தில் விஜயகாந்த் மனசுக்கு வந்து, ஷோபா விஜயகாந்துக்கு போன் அடிச்சு பேசுறாங்க. அப்போது சாரை பேசச் சொல்லுங்கன்னு விஜயகாந்த் சொல்றார். எஸ்.ஏ.சி தன் குடும்பச் சூழ்நிலையை விஜயகாந்திடம் சொல்கிறார். அரைமணிநேரத்தில் விஜயகாந்த் அவர் வீட்டுக்கு வந்து, நடிக்க சம்மதம் சொல்லி நடிச்ச படம் தான், செந்தூரப் பாண்டி. படம் வேற லெவல் ஹிட் ஆனது.

அடுத்து சங்கவி – விஜய் காம்பினேஷனில் நிறையப் படங்கள் வருது. ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகியப் படங்களில் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்குறாங்க. ஆவரேஜாகப் படம் ஓடுது. அப்போது சங்கவி கூட விஜய் நெருக்கமாகுறாங்க. இரண்டு பேரும் லவ் பண்றாங்க. அப்போது நிறைய நாட்கள் சங்கவி வீட்டிலேயே விஜய் தங்கிவிடுகிறார்.

ஒருநாள் இது எஸ்.ஏ.சி க்கு தெரியவர இரண்டு போரையும் கூப்பிட்டு எச்சரிக்கிறார். மேலும் இப்படி இருந்தால், சினிமாவில் வளரமுடியாது என்றும் கூறுகிறார். இருப்பினும், இருவரும் இவருக்கு தெரியாமல் லவ் பண்ணிட்டு தான் வந்திருக்கிறார்கள். இதும் ஒருநாள் தெரியவர, சங்கவியை கூப்பிட்டு அறிவுரை கூறுகிறார்.

அப்போது தான், சங்கவியின் டிராக் மாறுது. அடுத்து அவங்க அஜித் பக்கம் போறாங்க. அஜித்தின் முதல் பட ஹீரோயின் ஆக சங்கவி நடிக்கிறார். இதில் விஜய்க்கும் அஜித்துக்கும் பிரச்னைகள் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இதுவே அவர்கள் போட்டிக்கு முழு காரணம் இல்லையென்றாலும், இதுவும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.

Related Post

விஜய் சினிமாவில் செய்யாததை செய்யப்போகும் அவரது மகன் ஜேசன் சஞ்சய்!..எகிறும் எதிர்பார்ப்பு

Posted by - September 30, 2023 0
ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த நிலையில், ஒரு…

சன் பிக்சர்ஸ் & அட்லி கூட்டணி! ஹீரோ இவர்களா?

Posted by - May 27, 2023 0
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்…

TAMIL CINEMA NEWS | சினிமா செய்திகள்அவமானப்பட்டதை சரி செய்ய, பல கோடியை வாரி இறைத்த சூரி.. மனைவியால் அம்பலமான ரகசியம்

Posted by - March 28, 2023 0
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக கலக்கி கொண்டிருந்த சூரி, முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் விஜய் சேதுபதியும்…

கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது?

Posted by - December 15, 2025 0
ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும்…

பொண்ணு பாத்தாச்சு, அது முடிந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்.. முதன்முறையாக கூறிய விஷால்

Posted by - May 17, 2025 0
நடிகர் விஷால் நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷயம் அனைவருக்குமே பதற்றத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *