கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! – எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

263 0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார்.

சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டடுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதனையடுத்து 10 ஆண்டுகள் கழித்து 1967ஆம் ஆண்டுதான் முதன்முறையாக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். அப்போது அவருக்கு உள்ளாட்சி துறை வழங்கப்பட்டது.இந்நிலையில் 2022ல் முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 19 மாதங்களில் அமைச்சராக உள்ளார். அவருக்கு திட்ட அமலாக்கத்துறை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Post

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - January 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…
covai

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸார் – நடந்தது என்ன?

Posted by - November 4, 2025 0
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்ட 3 பேரும் கோவை…
thumbinal

திமுகவை சுத்து போட்டு விளாசி விஜய் ஆவேச பேச்சு

Posted by - February 23, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் தான் போட்டி என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார். TVK Vijay Speech Vellore: தன் மீது…

முக்கிய ரெயில் நிலையங்களில் ‘கியூஆர்கோடு’ ‘யு.பி.ஐ. செயலி’ மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் வசதி

Posted by - February 21, 2023 0
சென்னை: நவீன தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக அனைத்து தொழில் சார்ந்த நடவடிக்கைகளும் வங்கியின் மூலமே பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. கையில் ரொக்கமாக செலுத்துவதற்கு பதிலாக ‘கூகுள்…
dfghj

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *