காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

172 0

சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.26) தொடங்கி வைத்தார்.

சென்னை – மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். காலை 8.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு செய்து வைத்தனர். பின்னர் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் சிறப்பை குறிப்பிடும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. சுமார் 3.43 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கான காரணம், தொடங்கப்பட்ட நாள், அடுத்தடுத்த விரிவாக்கம், அதன் மூலம் மாணவர்கள் பெற்ற பலன் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

Generated Image February 09 2026 3 52PM

ரூ.10.71 லட்சம் கோடி கடன் சுமை

Posted by - February 17, 2026 0
Tamil Nadu Interim Budget 2026: தமிழ்நாடு அரசின் கடன்சுமை 2027ம் நிதியாண்டின் முடிவில் ரூ.10.71 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil…
dmk tvk

TVK Vijay: ‘பொது அறிவு இருக்காது’ – தவெகவுக்கு ஓட்டு போட்ட பெண்களை விமர்சித்த வினோதினி!

Posted by - May 1, 2026 0
இந்த சட்டமன்ற தேர்தலில் வினோதினி வைத்தியநாதன் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார். அவர் தவெகவுக்கு வாக்களித்த பெண்களை சரமாரியாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் அறிவார்ந்த சமூகம் என்பதெல்லாம்…

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - October 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…
Generated Image November 17 2025 11 26AM

”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?

Posted by - November 17, 2025 0
பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே, தமிழ்நாடு தேர்தலுக்கும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை…

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

Posted by - October 29, 2025 0
தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *