Generated Image January 09 2026 10 54AM

பிரபல தொலைக்காட்சியை வாங்கப்போகும் தவெக?

172 0

தமிழ்நாட்டின் பிரபலமான செய்தி தொலைக்காட்சி ஒன்றை வாங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். திமுக, அதிமுக என அரைநூற்றாண்டுகளைக் கடந்து இரு கட்சிகளுக்கும் போட்டியாக தமிழக வெற்றிக் கழகம் இறங்கியுள்ளது.

நெருங்கும் தேர்தல்:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், கடந்தாண்டு பிற்பாதி முதலே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால், கரூர் சம்பவம் தவெக-வை மிக கடுமையாக பாதித்தது. செங்கோட்டையன் வருகைக்கு பிறகு விஜய்யின் அரசியல் பயணம் தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் ஜனநாயகன் சிக்கலில் சிக்கி அமைதியாகவே உள்ளார்.

தொலைக்காட்சி தொடங்கும் தவெக:

ஒவ்வொரு முன்னணி கட்சிகளும் தங்களுக்கு என்று தொலைக்காட்சிகள் வைத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் தங்களுக்கு சாதகமாக செயல்பட தொலைக்காட்சியை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதியதாக தொலைக்காட்சி தொடங்க உரிமம் வாங்குவது உள்பட பல சவால்கள் இருப்பதால், ஏற்கனவே இயங்கி வரும் தொலைக்காட்சியை வாங்க தவெக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்காக, தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பழமையான ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சியை வாங்குவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்காக, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 3 முறை நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கட்டுப்படியாகாத விலை:

ஆனால், அந்த நிறுவனம் கூறிய விலை தவெக எதிர்பார்த்த தொகையை காட்டிலும் அதிகளவு இருப்பதால் அந்த தொலைக்காட்சியை வாங்குவதில் இழுபறியாக உள்ளது. மேலும்,  மற்றொரு தொலைக்காட்சியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பெயர் மாற்ற ஒப்புக்கொள்ள மறுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அந்த தொலைக்காட்சியை கைப்பற்ற தமிழக வெற்றிக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

விரைவில் அறிவிப்பு:

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும், அக்கட்சியின் நிர்வாகிகளும் முக்கிய விவகாரங்களில் வாயைத் திறக்காமல் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றனர்.

தங்களுக்கு சாதகமாக ஒரு தொலைக்காட்சி செயல்பட்டால் அது தவெக-வின் குரலாக ஒலிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். தொலைக்காட்சியின் விலை தவெக எதிர்பார்த்த தொகைக்கு வந்தால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வம்:

தற்போது வரை விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஆதரவாக எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, திமுக – அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இணையத்தில் தொடர் மோதல் வெடித்து வருகிறது. ஆனால், தங்களுக்கு என்று அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி இருந்தால் சாமானிய மக்களைச் சென்றடைவது இன்னும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த தொலைக்காட்சியை விரைவில் தொடங்க தவெக ஆர்வம் காட்டி வருகிறது.

 

Related Post

Generated Image February 16 2026 7 37PM

வாய் தவறி வந்துடுச்சு.. திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Posted by - February 16, 2026 0
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருப்பவர் நயினார் நாகேந்திரன். முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்யை நயினார் விமர்சித்து பேசும்போது “அவர் வீட்டை…
Generated Image November 17 2025 11 26AM

”ஒன்று சேர், புரட்சி செய்” மோடில் பாஜக.. நவகிரகங்கள், பீகார் ஃபார்முலா?தமிழகத்தில் சாத்தியமா?

Posted by - November 17, 2025 0
பீகார் சட்டமன்ற தேர்தலின் போது முன்னெடுத்த திட்டங்களை அப்படியே, தமிழ்நாடு தேர்தலுக்கும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாம். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திமுகவை…
ASDFGH

செம அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! ஏன்?

Posted by - February 17, 2026 0
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு…

#JUSTIN || தி.மு.க-வினர் OTP பெற தடை | #MaduraiHighCourt | #OTP | #DMK | #OraniyilTamilNadu | #pixeltv

Posted by - July 21, 2025 0
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் -வாக்காளர்களிடம் OTP பெறுவதற்கு நீதிமன்றம் தடை #DMK #CMMKStalin #OraniyilTamilNadu #HighCourt #Voters #Election2026 #TamilNews #JUSTIN || திமுகவின் ஓரணியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *