கில்லி ரிலீஸின் போது தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான்.. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்

199 0

கில்லி

இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லிவிஜய்யின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுனையாக கில்லி திரைப்படம் அமைந்தது. இன்று வரை விஜய் ரசிகர்களின் டாப் 10 திரைப்படங்களில் கண்டிப்பாக இப்படமும் இருக்கும். அந்த அளவிற்கு இப்படத்தை செதுக்கியிருப்பார் இயக்குநர் தரணி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.. இப்படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் பலரும் நடித்திருந்தனர்.

உண்மையை போட்டுடைத்த பிரபலம்

 

ஆனால், கில்லி படம் வெளிவந்த சமயத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் அவர்களின் நெருங்கிய நண்பரும் முக்கிய பிரபலமுமான ஒருவர் அளித்த பேட்டியில், “கில்லி படம் இன்று ரீ ரிலீஸில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், கில்லி ரிலீஸ் ஆன நேரத்தில் தயாரிப்பாளர் ரத்னம் தனது 14 கிரவுண்ட் இடத்தை எழுதி கொடுத்துதான் படத்தை ரிலீஸ் செய்தார். இன்றைக்கு அந்த இடத்தின் மதிப்பு ரூ. 60 – 70 கோடி ஆகும். ஆனால், அன்று ரூ. 2.90 கோடிக்கு எழுதி கொடுத்துதான் கில்லி படத்தை ரிலீஸ் செய்தார். அது அப்போது அவருக்கு லாபம் இல்லை” என அவர் கூறியுள்ளார்.இதன்பின், கடந்த ஆண்டு கில்லி ரீ ரிலீஸ் ஆனது. அப்போது தயாரிப்பாளர் ரத்னத்திற்கு லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

Related Post

சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

Posted by - January 25, 2024 0
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால்,…
Generated Image November 27 2025 10 19AM

விஜய், அஜித்தால் கூட முடியவில்லை.. ஆனால், அதை செய்து காட்டிய சூர்யா.

Posted by - November 27, 2025 0
கருப்பு சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் கருப்பு திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் திரிஷா,…

அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

Posted by - November 30, 2023 0
சூர்யா-ஜோதிகா நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும். இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள்…

எங்களால் முடிந்த வரை முயற்சித்தோம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிவைப்பு குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் உருக்கம்

Posted by - November 24, 2023 0
விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் இன்று வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது . கௌதம் வாசுதேவ் மேனன்…

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

Posted by - September 29, 2023 0
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *