குடைமிளகாயை வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. குழந்தைங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க…

221 0

உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்யுங்கள். குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இதைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்.

உங்களுக்கு குடைமிளகாய் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.குடைமிளகாயை வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. குழந்தைங்க 2 இட்லி  எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... | Red Capsicum Chutney Recipe In Tamil - Tamil  BoldSky

தேவையான பொருட்கள்:

சிவப்பு குடைமிளகாய் சட்னிக்கு..

* பெரிய சிவப்பு குடைமிளகாய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)

* பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)

* பூண்டு – 5 பல் (நறுக்கியது)

* வரமிளகாய் – 3

* உப்பு – சுவைக்கேற்ப

* புளி – 1 சிறிய துண்டு

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

பச்சை குடைமிளகாய் சட்னிக்கு..

* பச்சை குடைமிளகாய் – 2 (துண்டுகளாக்கப்பட்டது)

* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

* கறிவேப்பிலை – சிறிது

* பூண்டு – 6 பல்

* எள்ளு விதை – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* புளி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் குடைமிளகாய் சட்னிக்கு…

* மஞ்சள் குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

* பெரிய வெங்காயம் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)

* பச்சை மிளகாய் – 3

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* புளிபேஸ்ட் – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

செய்முறை:

சிவப்பு குடைமிளகாய் சட்னிக்கு…

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் அதே எண்ணெயில் சிவப்பு குடைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் அரைத்த சட்னியை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான சிவப்பு குடைமிளகாய் சட்னி தயார்.

பச்சை குடைமிளகாய் சட்னிக்கு…

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பின் அதில் குடைமிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சுள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* குடைமிளகாய் நன்கு வெந்ததும், அதில் சிறிது சர்க்கரை மற்றும் வறுத்து வைத்துள்ள எள்ளு விதைகளை சேர்த்து கிளறி, புளி பேஸ்ட் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து அரைத்தால், சுவையான பச்சை குடைமிளகாய் சட்னி தயார்.

மஞ்சள் குடைமிளகாய் சட்னிக்கு…

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, சர்க்கரை, புளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பிறகு வதக்கிய பொருட்களை இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான மஞ்சள் குடைமிளகாய் சட்னி தயார்.

Related Post

பத்தே நிமிடத்தில் எப்படி உடனடி ‘மொறுமொறு மெது வடை’ செய்யலாம்.? சிம்பிள் ரெசிபி..

Posted by - February 8, 2024 0
Medu Vadai Recipe | அனைவருக்கும் பிடித்த இந்த மெது வடையை 10 நிமிடத்தில் சுவையாக எப்படி மொறுமொறுவென்று செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம். சிறியவர்கள் முதல்…

பிக் பாஸ்- நாங்க செஞ்ச தப்பு.. ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்கள்

Posted by - April 5, 2023 0
சினிமாவில் நடித்த ஒரு சில நடிகர்கள் தங்களின் நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.…

புதிய சீரியல் வருகை, திடீரென முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ஹிட் தொடர்- ரசிகர்கள் வருத்தம்

Posted by - July 14, 2023 0
சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சில படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது, சில தொடர்கள் சரியான TRPயை பெறவில்லை. அதேபோல் நிறைய…

தீபக் வெளிய விஷால் உள்ள.. டிஆர்பிக்காக விஜய் டிவி செய்த பலே அரசியல்

Posted by - January 13, 2025 0
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பலரும் செம கோபத்திலும் அப்செட்டிலும் இருக்கின்றனர். ஏனென்றால் கடுமையான போட்டியாளராகவும் நியாயமானவராகவும் இருந்த தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார்.பைனல்ஸ் வரை வருவார் என நினைத்த இவரின் வெளியேற்றம் கடும் ஏமாற்றத்தை…

முருங்கைக் கீரையை வெச்சு அடுத்தமுறை இப்படி குழம்பு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க…

Posted by - August 29, 2023 0
வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மேலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *