IPL 2023 : பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி… 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

387 0

ஹெட்மேயர் – துருவ் ஜுரல் 7 ஆவது விக்கெட்டிற்கு 27 பந்துகளில் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றனர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதன்பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் செய்யத் தொடங்கினர்.

தொடக்க வீரர் பிரப்சிம்ரம் சிங் 34 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 60 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அவரும் கேப்டன் ஷிகர் தவானும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜிதேஷ் சர்மா 27 ரன்களும், ஷாரூக்கான் 11 ரன்களும் எடுக்க தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தது. 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 11 ரன்னும், அஷ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஜோஸ் பட்லர் 19 ரன்களும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களும் எடுத்து அணியின் தொடக்க இழப்பை சரி செய்தனர். அடுத்து வந்தவர்களில் தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 20ரன் எடுத்து வெளியேற பின்னர் இணைந்த ஹெட்மேயர் – துருவ் ஜுரல் இணை அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது. 15 ஓவர்கள் முடிவில் 124 ரன்களை ராஜஸ்தான் எடுத்திருந்தபோது இருவரும் இணைந்தனர். இருவரும் 7 ஆவது விக்கெட்டிற்கு 27 பந்துகளில் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியால் 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியை தழுவியது.

Related Post

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

குக் வித் கோமாளியை விட்டுவிட்டு மணிமேகலை கிராமத்தில் தொடங்கிய புது விஷயம்!

Posted by - March 6, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் முந்தைய சீசன்கள் மட்டுமின்றி இந்த சீஸனிலும் மணிமேகலை கோமாளியாக எல்லோரையும்…

நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. ஜோவிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த விஷ்ணு! கமல் முன்னிலையில் சண்டை

Posted by - October 16, 2023 0
பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை எபிசோடுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். வழக்கம் போல வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் பற்றி கமல் பேச தொடங்கினார். ஸ்மால் பாஸ் வீட்டார்…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

Posted by - May 9, 2023 0
சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான…

வானத்தைப்போல-வுக்கு பதில் சன் டிவியில் அடுத்த வாரம் தொடங்கும் புது சீரியல்! ப்ரோமோவுடன் இதோ

Posted by - August 13, 2024 0
சன்  டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய்  டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பியில் கடும் போட்டி இருந்து வருகிறது. அதனால் இரண்டு சேனல்களும் குறைந்த ரேட்டிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *