குழந்தைகளுக்கு விருப்பமான மேகி நூடுல்ஸ் ஆம்லெட்

217 0

குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.Maggi Omelette Recipe | Maggi Egg Omelette | Noodles Omelette | Easy Snacks  Recipe|Breakfast Recipe - YouTube

தேவையான பொருட்கள்

மேகி பாக்கெட் – 1

முட்டை – 2

கேரட் துருவல் – 2 டீஸ்பூன்

குடைமிளகாய் – 1

தக்காளி – 1 (சிறியது)

ப.மிளகாய் – 3

வெங்காயம் – 1 (சிறியது)

உப்பு, எண்ணெய் – சிறிதளவு

மஞ்சள் – 1 சிட்டிகை

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .

மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும்.

தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.

பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.

Related Post

1Rs முதல் பொருட்கள்..கிச்சன் முதல் கம்பியூட்டர் வரை…

Posted by - January 19, 2024 0
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குகிறீர்கள் என்றால் அமேசான் மற்றும் பிளிப்கார்டை கடந்து இன்னொரு தளத்தில் நீங்கள் மிக குறைவான பொருட்களை மிகவும் எளிதாக வாங்கலாம். ஆன்லைன் ஷாப்பிங்…

வனிதா தான் இனி ராதிகாவா? ஷாக் ஆன ரசிகர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் டீம் விளக்கம்

Posted by - January 29, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில்…

பிரபல நடிகருடன் சமந்தா இரண்டாம் திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா

Posted by - September 2, 2023 0
சமந்தா எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரையுலகில் கடந்த 13 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொண்டாடப்படுபவர் சமந்தா. இவர் குறித்து பல சர்ச்சைகள் வெளிவந்தாலும், அதை…

Earbuds எதை வாங்கலாம்? TWS எப்படி தேர்வு செய்ய வேண்டும்? – முழு வழிகாட்டி

Posted by - December 20, 2025 0
Earbuds வாங்கலாமா? எப்படி சரியான Earbuds தேர்வு செய்வது? இன்றைய டிஜிட்டல் காலத்தில் music, online classes, office meetings மற்றும் calls ஆகியவற்றிற்கு earbuds வாங்கலாமா…

Sun Tan-ஐ நீக்கி சருமத்தை பளப்பளப்பாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்..

Posted by - May 17, 2023 0
உங்களுக்கு சன்டேன் பிரச்சனை இருந்தால் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் சருமத்தின் கலரை மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். Sun Tan-ஐ நீக்கி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *