கேம் சேஞ்சர் :விமர்சனம்

235 0

 

கதைக்களம்

ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார்.

இதனால் CM மகனான எஸ் ஜே சூர்யாவின் மணல் கொள்ளை பாதிக்கப்படுகிறது, முதலமைச்சருக்கு தெரியாமல் இரவில் மணல் எடுக்கலாம் என்று பார்த்தால், ராம் சரண் அதற்கு தடையாக இருக்கிறார்.

இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார், அதோடு ராம் சரணை கொல்லவும் திட்டமிடுகிறார்.

ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த CM யார் என்பதை வெளியிட, அதை பார்த்த ஒட்டு மொத்த மாநிலம் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் ஷாக் ஆக, அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் மேலும் பல மடங்கு ஆக, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அரசியல் கதை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் ஷங்கருக்கு, ஆனால், அந்த அரசியல் களத்தில் தான் இந்தியன் 2-வில் சறுக்க, கேம் சேஞ்சர் மூலம் மீண்டும் தான் அரசியல் கிங் என நிரூபிக்க போராடியுள்ளார்.

ஆம், போராடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும., ராம் சரண் IAS ஆபிசராக மிடுக் ஆன தோற்றத்தில் கலக்கியுள்ளார், மொத்த படத்தையும் தாங்கி செல்வது ராம் சரண் தான், ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா ராம் சரண் கேரக்டரில் திக்கு வாயில் அவர் படும் கஷ்டங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்.

அதோடு இரண்டாம் பாதியில் மகன் ராம்சரண் தேர்தல் ஆணைய அதிகாரியாக வந்து செய்யும் அதிரடி ஆக்‌ஷன் என ராம் சரண் கெரியரில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது கேம் சேஞ்சர்.

கியாரா ஷங்கர் படம் என்றாலே ஹீரோயினுக்கு கொஞ்சமாது முக்கியத்துவம் இருக்கும், இதில் அதுக்கூட இல்லை, வெறும் அழகு பதுமையாக வந்து செல்கிறார், அதோடு பாடல்களுக்கு தலையை காட்டுகிறார்.

வில்லனாக எஸ் ஜே சூர்யா படம் முழுவதும் பழைய ஷங்கர் வில்லன் ரகுவரனை நியாபகப்படுத்துகிறார், அதோடு கிளைமேக்ஸில் பாம் வைக்கிற காட்சியெல்லாம் அப்படியே ரகுவரனாகவே மாறிவிடுகிறார். ஆனால், எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக தன் உடல் மொழியை இந்த படத்திலிருந்து மாற்றியே ஆகவேண்டும், இதுவே தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.

படத்தின் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக சென்றாலும், ராம் சரண் காலேஷ் போஷன் கியாராவுடன் காதல் படத்தின் வேகத்தடையாக வருகிறது.

இரண்டாம் பாதியில் ப்ளாஸ்பேக் டிபிக்கல் ஷங்கர் ஸ்டைல், ஆனால் இந்த முறை மசாலா மிக அதிகம், அதுவும் கொஞ்சம் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படம் போலவும் உள்ளது ப்ளாஸ்பேக் காட்சிகள்.

தேர்தல் ஆணையராக வரும் ராம் சரண் போஷன் மீண்டும் படம் செம வேகமெடுக்கிறது, அதிலும் கிளைமேக்ஸில் தேர்தல் கவுண்டிங்-கை எஸ் ஜே சூர்யா நிறுத்த வரும் காட்சியெல்லாம் இந்த டிஜிட்டல் உலகில் கூட இப்படி ஒரு காட்சி வைத்தது அதுவும் ஷங்கர் படமா இல்லை பாலையா படமா என்று தான் கேட்க தோன்றுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பல பிரமாண்ட கூட்டம், செட் என அனைத்தையும் அத்தனை அழகாக காட்டியுள்ளனர்.

தமனின் இசையில் தொப், ஜருகண்டி பாடல் அட்டகாசம், இரண்டும் விண்டேஜ் ஷங்கர் டச். பின்னணி இசை கொஞ்சம் இரைச்சலை குறைச்சு இருக்கலாம்.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி ராம் சரண் மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார். தேர்தல் ஆணையர் முக்கியத்துவத்தை மக்களுக்கு சொன்ன விதம்.

பல்ப்ஸ்

90ஸ் டைம் திரைக்கதை. லாஜிக் எல்லை மீறல்கள்.

மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஷங்கர் எடுத்துள்ள ஆந்திரா மீல்ஸ் காரசாரம் குறைவே.

5/10

Related Post

4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - January 28, 2025 0
குடும்பஸ்தன் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக…

ரீ-ரிலீஸாகும் கில்லி

Posted by - February 18, 2026 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர்…

விக்ரம், பா ரஞ்சித் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தியதா.? பிரகாசமாக மின்னிய தங்கலான் முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Posted by - August 16, 2024 0
 சமூக வலைத்தளம் முழுவதுமே இப்போது தங்கலான் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலர் படம் பற்றிய குறைகள் சொன்னாலும் ஒட்டுமொத்த ஆடியன்ஸும் தங்கலானை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு…

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - May 5, 2023 0
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர்…

நடிகரின் அந்தரங்க டார்ச்சரால் சினிமாவை விட்டே ஓடிய நடிகை.. ஆறுதல் கூறி அரவணைத்து கொண்ட சாமியார்

Posted by - December 2, 2022 0
90களில் பிரபல ஹீரோயினாக வலம் வந்த அந்த நடிகை தற்போது சினிமாவை வெறுத்து ஒதுக்கிவிட்டு ஆன்மீகவாதியாக மாறி இருக்கிறார். நடிகையின் இந்த முடிவுக்கு பின்னால் பிரபல நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *