பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

333 0

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. எந்த படத்த பாக்குறதுன்னு திண்டாட போறாங்க

பொதுமக்களோட பண்டிகை கொண்டாட்டங்கள்ல திரைப்படங்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கும். ஆடைகள் வாங்குறது, ஸ்பெஷலா சமைக்கறதுன்னு ஒருபக்கம் திட்டங்கள போடுற அதே சமயம், அவங்களுக்கு பிடிச்ச ஸ்டார்களோட படங்கள பாக்குறதுக்கும் பிளான் பண்ணிடுவாங்க. அந்த வகைல இந்த வருஷம், ரசிகர்கள ஏமாத்தாம, ஒரு பெரிய பட லிஸ்ட்டே இருக்கு.

விலகிய ‘விடாமுயற்சி’.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

2025-ம் வருஷம் பொங்கல் பண்டிகைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்னா, அது அஜித் நடிப்புல உருவாகியிருக்கற விடாமுயற்சி திரைப்படம்தான். லைகாவோட பிரமாண்ட தயாரிப்புல, மகிழ் திருமேணி இயக்கத்துல, பெரும் எதிர்பார்ப்புல இருந்த இந்த படம், பொங்கலுக்கு வெளியாகும்னு அறிவிக்கப்பட்டிருந்துச்சு. ஆனா, சில காரணங்களால பொங்கல் ரேஸ்ல இருந்து விலகுறதா படக்குழு அறிவிச்சுருக்கு. அதனால, அஜித் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றமடைஞ்சுட்டாங்க. விடாமுயற்சி ஜனவரி மாத இறுதில வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.

லைகா அறிவிப்பால் வரிசை கட்டிய திரைப்படங்கள்

பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி வெளியாகாது என்ற அறிவிப்பு வந்ததும், ஏராளமான படங்கள் தற்போது ரிலீசுக்கு வரிசை கட்டியுள்ளன. அந்த பட்டியல் இதோ…

  • கேம் சேஞ்சர் (தெலுங்கு/தமிழ்)
  • வணங்கான்
  • படை தலைவன்
  • மெட்ராஸ்காரன்
  • மதகஜராஜா
  • காதலிக்க நேரமில்லை
  • Ten Hours
  • நேசிப்பாயா
  • தருணம்

இதுல, ஜனவரி 10-ம் தேதி, மிகப்பெரிய எதிர்பார்போட, பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்துல, ராம்சரண் நடிப்புல, தெலுங்குல உருவாகியிருக்கற கேம் சேஞ்சர் படம் தமிழ்லயும் வெளியாகுது. அதே நாள்ல, பாலா இயக்கத்துல, அருண்விஜய் நடிப்புல உருவாகியிருக்கற வணங்கான் படமும் ரிலீஸ் ஆகுது. அதே 10-ம் தேதி, மறைந்த கேப்டன் விஜயகாந்த்தோட மகன் விஜய பிரபாகரன் நடிப்புல உருவாகியிருக்கற படை தலைவன் படமும் வெளியாகுது. இந்த படத்த அன்பு இயக்கி இருக்காரு. இந்த படங்களோட போட்டி போட, வாலி மோகன் தாஸ் இயக்கத்துல, கலையரசன் உள்ளிட்டவங்க நடிச்சுருக்கற மெட்ராஸ்காரன் படமும் வெளியாகுது.

ஜனவரி 12-ம் தேதி, சுந்தர். சி இயக்கத்துல, விஷால் நடிச்சு ரொம்ப நாளா கிடப்புல போடப்பட்ட மதகஜராஜா படம் வெளியாகுது.  பல வருஷங்கள் தாமதமா வெளியாகுற இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தில ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு.

ஜனவரி 14-ம் தேதி, கிருத்திகா உதயநிதி இயக்கத்துல, ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்புல உருவாகியிருக்கற காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகுது. காதல் படமான இந்த படத்துக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. அதே நாள்ல, விஷணுவர்தன் இயக்கத்துல, நடிகர் முரளியோட இளைய மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகுற நேசிப்பாயா படம் வெளியாகுது. இதுவும் ஒரு காதல் கதையா உருவாகியிருக்கு. இதோட, அரவிந்த் சீனிவாசன் இயக்கத்துல உருவாகியிருக்கற தருணம் படமும் வெளியாகுது.

மொத்தத்துல, இந்த லிஸ்ட்ட பார்க்கும்போது, இந்த பொங்கல் பண்டிகை, எந்த படத்த பாக்குறதுன்னு திரைப்பட ரசிகர்கள நிச்சயம் திக்குமுக்காட வச்சுடும்ங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல.

Related Post

tvkvijay

முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?

Posted by - ஜூன் 29, 2026 0
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் 6 மணி வரை இருந்து பணியாற்றுவதால் பல்வேறு கோப்புகளில் உடனுக்குடன் கையெழுத்து இடுகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பு வகித்து வருகிறார்.…

5 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - செப்டம்பர் 10, 2025 0
மதராஸி சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். ருக்மிணி வசந்த்,…

தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி

Posted by - ஜூலை 10, 2023 0
ரவீந்தர்-மகாலட்சுமி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர்கள்…
%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF

தீபாவளி ரேஸில் இத்தனை படங்களா, ரசிகர்களுக்கு செம விருந்து தான்

Posted by - செப்டம்பர் 12, 2026 0
தீபாவளி விருந்து தீபாவளி என்றாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் தான். புதுத்துணி, பட்டாசு தாண்டி புதுப்படங்களும் எப்போதும் தீபாவளி ஸ்பெஷல் தான். அந்த வகையில் இந்த வருடம்…

ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - ஏப்ரல் 15, 2023 0
டிக்டாக் பிரபலமான ஜிபிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜிபிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்டாக் மூலம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன