சப்பாத்திக்கு சூப்பரான பேபி கார்ன் மசாலா

369 0

பேபி கார்னில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 30 நிமிடங்களே போதுமானது.இன்று இரவு சப்பாத்திக்கு ஸ்பைஸியான பேபி கார்ன் மசாலா இப்படி செய்து பாருங்க !

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் – 1 பாக்கெட்

பிரஷ் க்ரீம் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

பால் – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 1

சீரகம் – 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

எண்ணெய் – 2 டீஸ்பூன்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வதக்கி அரைப்பதற்கு

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பூண்டு – 4 பற்கள்

எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும். பேபி கார்னை துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிரேவி போன்று வந்ததும், தீயைக் குறைத்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் பேபி கார்னை நீருடன் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், பேபி கார்ன் மசாலா ரெடி.

Related Post

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத் தோணுதா…? இந்த பிரச்சனைதான் காரணமாம்…

Posted by - September 18, 2024 0
காலையில் எழுந்ததும் மலம் கழித்து வயிற்றை சுத்தம் செய்த பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது வயிறுதான்.…

டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கருப்பு அரிசி தோசை

Posted by - March 23, 2023 0
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. குறைவான அளவில் கலோரிகள், கொழுப்பு உள்ளது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. தேவையான பொருட்கள் : கருப்பு அரிசி – ஒரு…

என்ன செய்தாலும் நீங்க சுடும் சப்பாத்தி சாஃப்டா வரலையா..? அப்போ இந்த டிப்ஸ் டிரை பண்ணி பாருங்க..!

Posted by - February 2, 2024 0
என்னதான் தினமும் சப்பாத்தி சுட்டாலும் அதை சாஃப்டான பக்குவத்தில் சுட பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் அது அவ்வளவு பெரிய இரகசியமும் கிடையாது. மாவு பிசையும்போது சில விஷயங்களை…

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்வீங்களா..? அனிதா சம்பத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 12, 2024 0
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அனிதா சம்பத் தற்போது அதே மக்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார். பிரபல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *