ஏழரைச் சனி, அஷ்டமச் சனியால் ஏற்படும் தொல்லைகள்

341 0

அஷ்டம சனியில் தொட்டது துலங்காது ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன் நின்ற ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனியாகும். அந்த மூன்று வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும். ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகள் என்று நஷ்டமாகவே அக்காலம் இருக்கும். அடுத்த பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும். அடுத்த பகுதியை கழிவு சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும் அஷ்டமச் சனி: ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோச்சார சனி வருவது தான் அஷ்டமத்து சனி. அஷ்டம சனியில் தொட்டது துலங்காது, அஷ்டமத்து சனி காலத்தில் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். வீண் பிரச்சினைகள் சிக்கி, பழி ஏற்க நேரும்.புத்தி தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். புத்தி வேலை செய்யாது ஆனால்உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். ஏழரை சனி 7 1/2 ஆண்டுகளில் செய்யும் வேலையை அஷ்டமச் சனி இரண்டரை வருடத்தில் செய்து முடித்து விடும். 3 சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.

லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது. ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள். அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள்.

Related Post

பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி- அறுவை சிகிச்சை நடந்ததா?

Posted by - January 10, 2024 0
பிக்பாஸ் 7 கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் விசித்ரா, வினுஷா, ரவீனா தாஹா, விஷ்ணு, மாயா,…

ராஜா ராணி 2ல் இருந்து திடீரென விலகிய ஹீரோயின்! புது சந்தியா யார்?

Posted by - February 16, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியில் தற்போது முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. அதில் முதலில் ஆல்யா மானசா ஹீரோயினாக நடித்து வந்தார்.…

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி

Posted by - June 24, 2024 0
திரிஷா, நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது இருவருமே…

இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?

Posted by - April 4, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக TRP அதிகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் ராதிகா கொடுக்கும் இடையூறுகளை சமாளித்து வெற்றிப்பெற்று வருகிறார் பாக்கியா.…

கோடை காலத்தில் இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்க.. ஈசியா சமாளிச்சிடலாம்..!

Posted by - February 26, 2024 0
கோடைக் காலத்தில் அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என பல தொல்லைகளிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என  மருத்துவர் கூறும் விளக்கங்களை பார்க்கலாம். கோடைக் காலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *