சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை கலைஞன் நடிகர் விவேக்.. வாழ்க்கை வரலாற்று

477 0

நடிகர் விவேக்

திரையுலக வாழ்க்கையில் ஒருவரின் இடத்தை நிரப்ப மற்றொரு கலைஞன் கண்டிப்பாக வருவார். அதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம்.

ஆனால், இனி யார் வந்தாலும் இவருடைய இடத்தை துளி அளவு கூட நிறைவு செய்யவே முடியாது என்பது போல் வாழ்ந்துள்ளார் விவேக். அவரின் வாழ்க்கை வரலாறை தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் பற்றிய சுவாரசியமான மற்றும் அதிகம் அறியப்படாத  தகவல்கள் சொல்ல முடியுமா? - Quora

வாழ்க்கை வரலாற்று

கடந்த 1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி அங்கய்யா பாண்டியன் – மணியம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் விவேக். இவருடைய முழு பெயர் விவேகானந்தன். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தான் இவர் பிறந்த ஊர்.

விஜயலக்ஷ்மி மற்றும் சாந்தி இருவரும் விவேக் உடைய சகோதரிகள் ஆவார்கள். ஊட்டியில் தனது பள்ளி படிப்பை முடித்த இவர், மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டத்தையும் பெற்றார். தனது சிறு வயதிலேயே பரத நாட்டியம் காற்றுக்கொண்டார்.

அதே போல் ஆர்மோனியம், வயலின் மற்றும் தபேலா போன்ற இசை கருவிகளை வாசிப்பதில் வல்லவர். மதுரை அஞ்சல் தந்தி அலுவலத்தில் பணியாற்றி வந்த விவேக், மதுரையில் நடைபெற்ற பரத நாட்டிய போட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இதன் இறுதி போட்டி சென்னையில் நடைபெற்றது.அங்கு வந்து போட்டியில் கலந்துகொண்ட விவேக்கிற்கு, கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்துள்ளது. விவேக்கின் நடனத்தையும், மிமிக்கிரி திறமையையும் பார்த்துவிட்டு 1987ஆம் ஆண்டு தன்னுடைய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார் கே. பாலச்சந்தர்.நடிகர் விவேக் கடந்த வந்த பாதைகள்... பிறப்பு முதல் இறப்பு வரை என்னென்ன  வேலைகள் செய்துள்ளார் தெரியுமா? - மனிதன்

நடிகர் விவேக், அருள்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா குமார் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இதில் பிரசன்னா குமார் கடந்த 2015ஆம் ஆண்டு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1990 காலகட்டத்தின் ஆரம்பத்தில் துணை நடிகராக தமிழில் நடிக்க துவங்கினார். இதன்பின் தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து முன்னணி நட்சத்திரமாகவும் உயர்ந்தார்.

மக்களை சிரிக்க வைக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும் வகையில் இருந்தது இவருடைய வசனங்கள்.

புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள், சிவாஜி, குருவி, அந்நியன், பேரழகன் உள்ளிட்ட படங்களை இவருக்காகவே பார்க்கலாம்.

அப்துல் கலாம் பாதியில் பயணித்து வந்த இவர் ஒரு கோடி மரங்களை நடுவேன் என சபதம் எடுத்திருந்தார். ஆனால், மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2021ஆம் ஏப்ரல் மாதம் மரணடைந்த விவேக் தனது வாழ்நாளில் 33.23 லட்சம் மரக்கன்றுகளை நட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்கிய விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – ரன்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – சாமி

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – பேரழகன்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – சிவாஜி

தமிழக அரசு விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது– உன்னருகே நான்னிருந்தால்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – ரன்

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – பார்த்திபன் கனவு

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – சிவாஜி

மற்ற விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்

சிறப்பு சான்றாயர் விருது – ஏசியாநெட் திரைப்பட விருதுகள்

சிறந்த ஆண் நகைச்சுவை விருது – எடிசன் விருதுகள்

சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல் பண்பலை வானொலி விருதுகள்

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – (ITFA)

நன்மதிப்பு

பத்மசிறீ விருது – இந்திய அரசு விருது விழா

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

பிச்சைக்காரன் 2 -பக்கா ரிவியூ இதோ!

Posted by - மே 20, 2023 0
கொடிய விஷம் கொண்ட பாம்புவிற்கு இறையாகும் எலியை, ஒரு எளியவன் வாழ்க்கை பின்னணியில் செண்டிமெண்டுடன் சொல்ல முயற்சித்துள்ளனர். அந்த முயற்சி கைகொடுத்ததா? விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன்…

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - ஆகஸ்ட் 31, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தின் முதற்கட்ட…

படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு

Posted by - ஆகஸ்ட் 8, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய…

இந்த நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம்.. ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்டால் ரசிகர்கள் அதிருப்தி

Posted by - செப்டம்பர் 11, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.…
DC Movie Review

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள DC திரைப்படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

Posted by - ஆகஸ்ட் 8, 2026 0
DC படம் தமிழ் சினிமாவில் மக்கள் கவனிக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் அவர் சினிமா அறிமுகமான முதல் படம், அதன்பின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன