இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

258 0

ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.

இதன் பயனாக இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஒரு பிணைக்கைதிக்கு மூன்று பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது.இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு | operational  pause will continue Isreal army
முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்று 6-வது நாளாக ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேலும் பாலஸ்தீனர்களை விடுவித்தது. இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை தொடருமா? போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் “ராணுவ நடவடிக்கை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது அப்படியே தொடரும். வரையறைக்கு உட்பட்டு மத்தியஸ்தரர்கள் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு தொடருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஒரு பிணைக்கைதியை விடுவிக்கும்போது, இஸ்ரேல் 3 பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து விடுவிக்கும். மேலும், காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் எதிர்பாராத வகையில் கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டில் 1200 பேரும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

Related Post

எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்…

Posted by - May 7, 2025 0
இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூரால், பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன் முழு விவரங்களை பார்க்கலாம். பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதற்கு பதிலடியாக,…

காதலன் தேவை என விளம்பரம் செய்த பெண்

Posted by - August 9, 2023 0
டேட்டிங் செல்வதற்கும் வயது வித்தியாசம் இல்லை என கூறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நியூயார்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என்று…

என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்…

Posted by - May 7, 2025 0
இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள செய்திகளை இந்தியாவின் பிஐபி(PIB) மறுத்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

எல்லைப் பகுதியில் பதற்றம் : இந்தியாவுடனான உறவு தொடர்பாக சீனா எடுத்த முக்கிய முடிவு..!

Posted by - December 27, 2022 0
இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *