சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

240 0

பெய்ஜிங்:

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன.Chinese Man Loses Hearing After Kissing Girlfriend For 10 Minutes

என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருவரும் ‘லிப்லாக்’ எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர்.

இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர். இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Post

பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

Posted by - July 17, 2023 0
லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த…

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்!

Posted by - November 28, 2024 0
 இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன…

”நாங்க மட்டும் இல்லைன்னா” இந்தியாவை வெறுப்பேற்றி பார்க்கும் அமெரிக்கா.. பாக்., உடனான உறவு

Posted by - August 13, 2025 0
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடனான எங்களது உறவில் எந்த மாற்றமும் இல்லை என, அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தியாவை சீண்டிப்பார்க்கும் விதமாக குற்றச்சாட்டுகள்…

மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் – ஆய்வு

Posted by - August 11, 2023 0
வார்சா: எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம்.…

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

Posted by - August 8, 2025 0
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *