சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

224 0

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது.சீரமைப்பு பணிகள் நிறைவு - 51 மணி நேரத்திற்கு ரெயில் சேவை தொடக்கம் | Train  movement resumes in the affected section where the horrific Balasore Train  Accident

900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன.

தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது. சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்.

Related Post

இன்று அதல பாதாளத்தில் பங்குச்சந்தை! காரணம் என்ன? எப்படி மீள்வது? என்ன செய்ய வேண்டும்?

Posted by - April 7, 2025 0
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை அதாவது இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரத்தை மிகப்பெரிய சரிவுடன் பங்குச் சந்தை தொடங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை…

பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

Posted by - December 13, 2025 0
அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது”…

ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் – தவெகவின் தரமான சம்பவம்

Posted by - March 5, 2025 0
பல லட்சம் கோடி கடனுக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மூலம் புதிய எம்.பிக்கள் அவசியமா? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார் மாநில அரசுகளுக்கு உரிய…

இமாச்சல பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: அடித்துச் செல்லப்படும் கார்கள்- பதற வைக்கும் வீடியோ காட்சி

Posted by - July 11, 2023 0
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக்…

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கோலாகலம்: பக்தர்களுக்கு மகா லகு தரிசனம்

Posted by - February 17, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *